ஹைதராபாத்: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் தங்களுடைய நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ஐந்தாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்கோத்ரா தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டி பகுதியில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு ரோஷினி நாடார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த புதிய அலுவலகத்தின் மூலம் ஹைதராபாத்தில் கூடுதலாக 5,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் குறிப்பாக பொறியியல் துறை சார்ந்து இந்த வேலை வாய்ப்புகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் தெலுங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
மாநில அரசோடு இணைந்து இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவது குறித்து ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் எடுத்துரைத்தது. அப்போது ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு உட்பட்ட கல்வி தளமான GUVI மூலம் தெலுங்கானாவின் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்தோடு இணைந்து பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்துவது என்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இதனை விரிவாக்கம் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் ஹெச்சிஎல் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருவது மட்டுமின்றி தங்களுடைய நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருப்பதற்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நன்றி தெரிவித்தார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் ஹெச்சிஎல் நிறுவனம் மிகப்பெரிய பங்காற்றி இருப்பதாகவும் அவர் பெருமை தெரிவித்தார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் தெலுங்கானா அரசு இடையே மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தொழில் மேம்பாட்டு பயிற்சிகளை அழிப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஏற்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ரோஷினி நாடார் கூறியுள்ளார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் 1976 ஆம் ஆண்டு ஷிவ் நாடார் அவர்களால் நிறுவப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் தலைமையிடம் நொய்டாவில் அமைந்துள்ளது, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவராக ரோஷினி நாடார் மல்கோத்ரா பணியாற்றி வருகிறார்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications