சென்னை: இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சி. விஜயகுமார்-ன் 2024 ஆம் நிதியாண்டுக்கான சம்பளம் 190% அதிகரித்து ரூ.84.17 கோடியாக (சுமார் $10.06 மில்லியன்) உயர்ந்துள்ளது என்று ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் அவரது மொத்த சம்பளம் 3.46 மில்லியன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
HCL டெக்னாலஜிஸ் 2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிகர லாபம் 20% அதிகரித்து ரூ.4,257 கோடி அளவிலான லாபத்தை பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 7% அதிகரித்து ரூ.28,057 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் ஹெச்சில் நிறுவனத்தின் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் விஜயகுமாரின் சம்பளம் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த தடாலடி உயர்வுடன் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளில் இரண்டாவது அதிக சம்பளம் பெறுபவராக விஜயகுமார் உருவெடுத்துள்ளார். முதலிடத்தில் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி தியரி டெலபோர்ட்டே இருக்கிறார், 2024ஆம் ஆண்டில் இவரது சம்பளம் 20 மில்லியன் டாலராகும், இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.166 கோடியாகும். இதன் மூலம் 2வது இடத்தில் இருந்த இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் ஓரம்கட்டப்பட்டார்.
அமெரிக்காவிலிருந்து ஹெச்சிஎல் டெக் சாம்ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்யும் விஜயகுமார், HCL அமெரிக்கா இன்க் நிறுவனத்திலிருந்து தனது சம்பளம் பெறுகிறார். இது HCL டெக்னாலஜிஸின் அமெரிக்க கிளை நிறுவனமாகும். சி. விஜயகுமாரின் சம்பளத்தில், பங்குதாரர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து எந்த மாற்றமும் இல்லை என்று ஹெச்சிஎல் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சி. விஜயகுமாரின் சம்பளத்தின் ஒரு பகுதியாக HCL அமெரிக்கா நிறுவனத்திடம் இருந்து நீண்ட கால ஊக்கத்தொகை வாயிலாக 2.36 மில்லியன் டாலர் ரொக்க பணத்தை பெற்றுள்ளார். இதோடு செயல்திறன் அடிப்படையிலான பங்குகள் வாயிலாக ரூ.38.1 கோடி மதிப்பிலான பங்குகள் 2024 ஆம் நிதியாண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட 1.14 மில்லியன் டாலர் மதிப்பிலான செயல்திறன் அடிப்படையிலான போனஸ் தொகை, 2023ஆம் நிதியாண்டின் செயல்திறன் உடன் தொடர்புடையது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
2024 ஆம் நிதியாண்டில் HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.3% அதிகரித்து ரூ.109,913 கோடியாக உள்ளது, லாபம் 5.7 சதவீதம் அதிகரித்து ரூ.15,702 கோடியாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications