TCS-க்கு போட்டியாக வருகிறது HCL.. இதை எதிர்பார்க்கலையே.. இனி ஆட்டம் சூடுப்பிடிக்கப்போகிறது!

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் புதிய வர்த்தகத்தை பெறுவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஏற்படும் வர்த்தக பாதிப்புகளை சரி செய்ய மாற்று வர்த்தகத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

இதில் முதல் நிறுவனமாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கிளவுட் சேவை, ஏஐ சேவைக்கு அடிப்படை தேவையாக இருக்கும் டேட்டா சென்டர் அமைப்பதில் டிசிஎஸ் பெரும் முதலீட்டை செய்துள்ளது, இது முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

TCS-க்கு போட்டியாக வருகிறது HCL.. இதை எதிர்பார்க்கலையே.. இனி ஆட்டம் சூடுப்பிடிக்கப்போகிறது!

இந்த நிலையில் இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் ஹெச்சிஎல் சமீபத்தில் உள்நாட்டு ஏஐ நிறுவனமான சர்வம் ஏஐ நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்திருந்தது.

இக்கூட்டணியை நீட்டிக்கும் விதிகமாக இரு நிறுவனங்களும் சேர்ந்து ஓடிசாவில் முதல் ஏஐ டேட்டா சென்டரை அம்மாநில அரசுடன் இணைந்து அமைக்க முடிவு செய்துள்ளது, இப்புதிய டேட்டா செனடருக்கா ஹெச்சிஎல் தலைமையிலான கூட்டணி சுமார் 14,257 கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்ய உள்ளது.

இந்த ஒரு டேட்டா சென்டர் மூலம் ஹெச்சிஎல் நிறுவனம் ஃபுல் ஸ்டாக் ஏஐ சேவை திறன்களை பெறும், இதேவேளையில் சர்வம் நிறுவனத்தின் பவுண்டேஷன் ஏஐ மாடல்களை மேம்படுத்தி துறைவாரியான ஏஐ சேவைகளை உருவாக்கி, அதை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிக்க உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் சர்வம் ஏஐ நிறுவனம் தற்போது இந்திய மக்களுக்காக பல மொழிகளில் இயங்கும் ஏஐ மாடல்களை உருவாக்கி வருகிறது.

இந்த மாபெரும் டேட்டா செனடர் அமைப்பதற்காக ஹெச்சிஎல் டெக், ஒடிசா அரசு, சர்வம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி அமைச்சர் முகேஷ் மஹாலிங், HCLTech தலைவர் ரோஷ்னி நாடார் , சிஇஓ C. விஜயகுமார் மற்றும் சர்வம் இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+