HCLTech அறிமுகம் செய்த AI Foundry.. இனி ஏஐ துறையில் கலக்கப்போகிறது..!!

சென்னை: இந்திய ஐடி சேவை துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் HCLTech நிறுவனம், புதிதாக "HCLTech Enterprise AI Foundry" என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹெச்சிஎல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு (AI) பயணத்தை எளிமைப்படுத்தவும், விரிவுபடுத்தவும் பெரிய அளவில் உதவும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் தற்போது ஏஐ சேவை அளிப்பதற்காகத் தயாராகி வருகிறது. வங்கி சேவை முதல் ஏரோஸ்பேஸ் வரையில் அனைத்து துறையிலும் ஏஐ சேவையை மக்கள் விரும்பும் காரணத்தால் ஐடி சேவை அளிக்கும் நிறுவனங்களும் இத்துறையில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது.

HCLTech அறிமுகம் செய்த AI Foundry.. இனி ஏஐ துறையில் கலக்கப்போகிறது..!!

இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் AI Foundry இந்த ஒருங்கிணைந்த தளமானது, டேட்டா இன்ஜினியரிங் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் காக்னிடிவ் இன்பராஸ்டக்சர் இணைத்து, மொத்த வணிகத்தையும், ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு (GenAI) துறைக்கு மாற்றுவதற்கான அடிப்படை கட்டமைப்பைக் கொடுத்துள்ளது.

HCLTech Enterprise AI Foundry, அமேசான் வெப் சர்வீசஸ் (AWS), மைக்ரோசாப்ட் azure மற்றும் கூகுள் கிளவுட் பிளாட்ஃபார்ம் (GCP) போன்ற கிளவுட் சேவைகளுடன் இணக்கமாக இருப்பதுடன், நிறுவனத்தின் சொந்த கட்டமைப்பிலும் (on-prem) செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.

HCLTech AI Force அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, Enterprise AI Foundry செயற்கை நுண்ணறிவு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சமீபத்தில் ஐடி மற்றும் ஐடீஸ் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், சேலம் ELCOT SEZ ஐடி பார்க்கில் HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பிபிஓ (BPO - Business Process Outsourcing) சேவைக்கான அலுவலகம் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, சேலம் பகுதியில் இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி ஹெச்சில் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் சமீபத்தில் சேலம் ELCOT SEZ ஐடி பார்க்கை நேரில் பார்வையிட்டு உள்ளனர். இதன் அடிப்படையில், அங்கு பிபிஓ சேவை மையம் அமைக்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுவரை, HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்திடமிருந்தோ அல்லது ELCOT SEZ நிர்வாகத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இது ஒருப்பக்கம் இருக்க இந்திய ஐடி துறை குறுகிய காலத்திற்குள் மந்தமான வர்த்தக சூழ்நிலையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐடி துறையினரைச் சற்று பயமுறுத்தியது என்றால் மிகையில்லை.

அமெரிக்காவில் உள்ள வங்கி, நிதி சேவை நிறுவனங்கள் (BFSI) மிகவும் கவனமாக டெக் சேவைகளுக்குச் செலவுகளைச் செய்வதால், இந்திய ஐடி துறையில் குறுகிய காலத்திற்கு, மந்தமான டிமாண்ட் நீடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்திய ஐடி சேவைத் துறைக்கு 30-40 சதவீத வருவாய் BFSI பிரிவில் இருந்து வரும் வேளையில், இத்துறை டெக் சேவைகளுக்கு செலவு செய்வதில் தயக்கம் காட்டுவதால் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+