ஒரு காலத்தில் 5வது இடத்தில் இருந்த HCL Tech நிறுவனம் ரோஷினி நாடார் கையில் மாறிய பிறகு வேகமாக வளர்ந்தது மட்டும் அல்லாமல் பல பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும் டிசிஎஸ், இன்போசிஸ் உடன் நேருக்கு நேர் போட்டிப்போட்டு வருகிறது. ஆனாலும் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் எதிர்கொள்ளும் அதே வர்த்தக தடுமாற்றத்தை ஹெச்சிஎல்-ம் எதிர்கொண்டு தான் வருகிறது.
இந்த நிலையில் ஹெச்சிஎல் தனது காலாண்டு முடிவுகள் வெளியிட்ட பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில், இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி பிரஷ்ஷர்களை (fresher) தேர்ந்தெடுப்பு முறையில் மாற்றம் செய்துள்ளதை அறிவித்துள்ளது.

இனி வரும் காலக்கட்டத்தில் ஹெச்சிஎல் டெக் நிர்வாகம் பிரஷ்ஷர்களை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதற்கு பதிலாக திறன் வாய்ந்த, சிறப்பு நிபுணத்துவம் கொண்ட பிரஷ்ஷர்களை தேடி பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதோடு, இந்த சிறப்பு பிரிவு பிரஷ்ஷர்களுக்கு "Elite Cadre" என்று அழைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Elite Cadre பிரிவில் தேர்வு செய்யப்படும் பிரஷ்ஷர்களுக்கு, பொது பிரிவில் சேர்வு செய்யப்படும் பிரஷ்ஷர்களை விட 4 மடங்கு அதிக ஊதியம் வழங்கப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இத்தகைய முறை பிற ஐடி சேவை நிறுவனத்தில் இருந்தாலும் 4 மடங்கு சம்பளம் என்பது பெரிய விஷயம் என்பது பெரிய மாற்றம்தான்.
பொதுவாக இந்தியாவில் டாப் 5 ஐடி சேவை நிறுவனத்தில் பிரஷ்ஷர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் என பார்த்தால் 3- 4 லட்சம் வரை தான் இத்தகைய சூழ்நிலையில் திறமை இருந்தால் 12 - 16 லட்சம் வரையில் சம்பளம் கிடைக்கும் என்பது பெரிய விஷயம். இன்று ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கூட இத்தகையை சம்பளம் பிரஷ்ஷர்களுக்கு இல்லை என்பது தான் வியக்க வைக்கும் விஷயம். அதேபோல் Elite Cadre பிரிவில் தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு சிறப்பு தகுதிகள் இருக்க வேண்டும் என ஹெச்சிஎல் நிர்வாகம் கூற வாய்ப்பு உள்ளது.
HCLTech-ன் முதல் காலாண்டு முடிவுகள் வெளியிடும் போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமை HR பிரிவு அதிகாரி ராம் சுந்தரராஜன், "கடந்த இரண்டு காலாண்டுகளாக நான் சொல்லி வருவது என்வென்றால், பிரஷ்ஷர்களை அதிக எண்ணிக்கையில் சேர்ப்பதை விட சிறப்பு நிபுணத்துவத்தை அடிப்படையில் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்பது தான். சிறப்பு நிபுணத்துவம் கொண்ட பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்கும் எண்ணிக்கை நிறுவனத்தில் மெதுவாக உயர்ந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இவர்களின் வருகை AI (ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்), டேட்டா அனலிட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி போன்ற புதிய தொழில்நுட்பத்தில் துறையை புரட்டி போட்டு வருகிறது. இதனால் நிறுவனங்கள் தங்களது தேர்வு முறையை மறுசீரமைக்க வேண்டியிருக்கிறது.
இந்த "எலிட்டு குழு" பற்றி பேசிய சுந்தரராஜன், "சேவை துறையில் எலிட்டு இன்ஜினியர்களுக்கு பொதுவான பிரஷ்ஷர்களை விட 3 மடங்கு அதிக ஊதியமும், சாப்ட்வேர் துறையில் 4 மடங்கு அதிக ஊதியமும் வழங்கப்படும்" என்று விளக்கினார்.
இந்த அதிகப்படியான ஊதியம், டேட்டா மற்றும் AI, டிஜிட்டல் இன்ஜினியரிங்க, சைபர் செக்யூரிட்டி, என்டர்பிரைஸ் திறன்கள் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை கவர உதவும். இது சிறிய நகரங்களிலும் படித்தவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை தரும் என சுந்தரராஜன் பேசினார்.
இந்த நிதியாண்டில் HCLTech சுமார் 15-20% பிரஷ்ஷர்களை இந்த எலிட்டு குழுவாக தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளது. திறன்வாய்ந்த ஊழியர்கள் அதிகமாக இருந்தால் நிர்வாகம் தேர்ந்தெடுக்கவும் தயார், எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் இல்லை என தெரிவித்தார். மேலும் அவர், கடந்த நிதியாண்டில் 7,000 பிரஷ்ஷர்களை சேர்த்த நிறுவனம், இந்த நிதியாண்டில் அதை விட அதிகமான பிரஷ்ஷர்களை சேர்க்க உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications