ஹெச்.சி.எல்.டெக் நிறுவனம் என்பது உலகளாவிய தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஐடி தீர்வுகள் வழங்கும் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில், பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) சி. விஜயகுமார் (வயது 57) இருந்து வருகிறார். தற்போது இவர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் அதிக ஊதியம் பெறும் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2024-25 நிதியாண்டில் (FY25), அவருக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியம் சுமார் ரூ.94.6 கோடி ஆகும்.

சி. விஜயகுமாரின் சம்பளமானது அடிப்படை சம்பளம், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கங்கள், பங்கு வழங்கல்கள் மற்றும் பிற நன்மைகள் ஆகியவற்றைக் கொண்டது. இது கடந்த நிதியாண்டை விட தொடர்ந்து உயர்ந்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் (FY24), அவரின் ஊதியம் சுமார் ரூ.84.17 கோடியாகும்.
2023-24ஆம் நிதியாண்டில், விஜயகுமாரின் சம்பளம் 190% அதிகரித்துள்ளது. இது அந்த ஆண்டில் HCLTech ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சராசரி 7% ஊதிய உயர்வை முற்றிலும் கடந்து, பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், 2024-25ஆம் நிதியாண்டில் HCLTech நிர்வாக வாரியம் விஜயகுமாரின் சம்பளத்தை 71% உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், அவரது 2025-26ஆம் நிதியாண்டுக்கான ஊதியம் ரூ.154 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
HCLTech நிறுவனம் தனது வருடாந்திர அறிக்கையில், சி. வியஜகுமார் தலைமையில் HCLTech-இன் சந்தை மதிப்பு மார்ச் 31, 2016-ல் ரூ.1,15,000 கோடி இருந்து, மார்ச் 31, 2025-க்கு ரூ.4,32,000 கோடியாக 3.8 மடங்கு உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில், இந்தியாவின் முன்னணி ஐந்து IT சேவை நிறுவனங்களில் மற்ற நான்கு நிறுவனங்களின் சந்தை மதிப்பும் சுமார் 2.5 மடங்கு மட்டுமே உயர்ந்துள்ளது.
2025ஆம் நிதியாண்டில் இன்ஃபோசின் சி.இ.ஓ. சாலில் பரேக்கின் சம்பளம் ரூ. 80.62 கோடி, விப்ரோவின் ஸ்ரீநிவாஸ் பல்லியாவுக்கு ரூ. 53.64 கோடி, டெக் மகேந்திராவின் மொஹித் ஜோஷிக்கு ரூ. 52.1 கோடி, டிசிஎஸ் கே. கிருத்திவாசனுக்கு ரூ. 26.5 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
ஹெச்சிஎல்டெக் சிஇஓ-வின் சம்பள விவரங்கள்: ஹெச்சிஎல்டெக் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், சி. விஜயகுமாரின் FY25 ஊதியத்தின் முழுமையான விவரங்கள் வெளியாகியுள்ளன. அவரது மொத்த ஊதியமான ரூ. 94.6 கோடி கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது
அடிப்படை சம்பளம்: ரூ. 15.8 கோடி
செயல்திறன் சார்ந்த போனஸ்: ரூ. 13.9 கோடி
நீண்ட கால ஊக்கத்தொகைகள்: ரூ. 56.9 கோடி
சலுகைகள் மற்றும் இதர பலன்கள்: ரூ. 1.7 கோடி
இந்த விவரங்கள், விஜயகுமாரின் ஊதியத்தில் பெரும்பாலான பங்கு, நீண்ட கால செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் அளிக்கும் பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.
சவால்களுக்கு மத்தியிலும் சம்பள உயர்வு: நிறுவனம் டிஜிட்டல், கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் தீவிரமாகப் போட்டியிட முயற்சிப்பதன் பின்னணியில் இந்த ஊதிய உயர்வு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு வழங்கப்படும் சம்பளம், அந்த நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள் மற்றும் சந்தையில் அதன் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது. விஜயகுமாரின் இந்த அதிகபட்ச ஊதியம், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் லாபத்தை உறுதி செய்ததற்காக அவருக்கு வழங்கப்படும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, FY23 நிதியாண்டில், விப்ரோவின் தியரி டெலாபோர்ட் ரூ.82 கோடி தொகுப்புடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தார். ஆனால், தற்போது ஹெச்சிஎல்டெக்-ன் தலைமை நிர்வாக அதிகாரியான சி. விஜயகுமார், இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் ஐடி துறை தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்துள்ளார். இது இந்திய ஐடி துறையில் தலைமைப் பதவியில் உள்ளவர்களின் ஊதியங்கள், நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வருவாய் ஈட்டும் திறனுடன் எவ்வாறு நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications