தமிழ்நாடு தான் முக்கியம்.. கேரள திட்டத்தை கைவிட்ட கொரியாவின் ஹெச்டி ஹூண்டாய்!

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு மத்தியில் பெரும் போட்டி இருந்து வரும் வேளையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டத்திற்காக கேரளாவில் ஒப்புதல் அளித்த திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளது கொரியாவின் ஹெச்டி ஹூண்டாய்.

இந்நிறுவனம் தமிழ்நாட்டில் துறைமுக நகரமான தூத்துக்குடியில் சுமார் 4 பில்லியன் டாலர் முதலீட்டில் 2.5 மில்லியன் கிராஸ் டன்னேஜ் திறன் கொண்ட கப்பல் கட்டுமான திட்டத்தில் தற்போது முழு கவனத்தை செலுத்தி வரும் காரணத்தால் தற்போது கொச்சியில் திட்டமிட்டபட்ட பிளாக் ஃபேப்ரிகேஷன் திட்டத்தை கைவிட்ட கிட்டத்தட்ட முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் இதற்கான உறுதியான முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு தான் முக்கியம்.. கேரள திட்டத்தை கைவிட்ட கொரியாவின் ஹெச்டி ஹூண்டாய்!

உலகின் 2வது மிகப்பெரிய கப்பல் கட்டுமான திட்டமான தென் கொரியாவின் ஹெச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ், கொச்சி ஷிப்யார்டு நிறுவனத்துடன் இணைந்து சுமார் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் கேரள அரசிடம் இருந்து குத்தகைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் பிளாக் ஃபேப்ரிகேஷன் தளத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த கவனமும் தூத்துக்குடி திட்டத்தில் இருக்கும் காரணத்தால் இத்திட்டத்தை கைவிட முடிவு செய்தி வருகிறது.

பிளாக் ஃபேப்ரிகேஷன் என்பது கப்பல் கட்டுமானத்தில் இருக்கும் ஒரு சிறப்பு வொர்க்ஷாப். இங்கு கப்பல் தயாரிப்பதற்கான ஸ்டீல் பிளேட்களை கட் செய்து கப்பலுக்கான வடிவத்தில் வெல்ட் செய்யும். இதை தான் பிளாக் என கப்பல் கட்டுமான துறையில் அழைக்கப்படுகிறது. இங்கு பைப், வயர், பெயின்டிங் என அனைத்து பணிகளும் நடக்கும்.

பொதுவாக கப்பல் கட்டுமானத்தில் ஒவ்வொரு பணிகளைும் அடுத்தடுத்து நடக்கும், ஆனால் பிளாக் வொர்க்ஷாப் கட்டமைப்பில் கப்பல்களின் பகுதிகள் அனைத்தும் சிறு சிறு பகுதிகளாக வந்து இணைப்படும். இதன் மூலம் கப்பல் கட்டுமான பணிகள் வேகமாக முடியும், இதேபேல் கட்டுமானத்திற்கான நேரத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த 4000 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாக் ஃபேப்ரிகேஷன் தளம் கொச்சி ஷிப்யார்டு நிறுவனத்தின் புதிய ட்ரை டாக்கிற்கு பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இத்திட்டம் தற்போது கைவிடப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதேவேளையில் இத்திட்டத்தை ஹெச்டி ஹூண்டாய் கைவிட்டால் கொச்சி ஷிப்யார்டு சொந்த முயற்சியில் இத்திட்டத்தை செயல்படுத்தும் என தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சியும், எதிர்கால திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+