சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் பிரிவான HDB பைனான்சியல் சர்வீசஸ், ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு சுமார் ரூ.2,500 கோடி திரட்டும் திட்டத்திற்கு இதன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று ஹெச்டிஎப்சி வங்கி வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஐபிஓ-வின் கீழ், புதிய பங்கு விற்பனை மூலம் ரூ.2,500 கோடி நிதியை ஈர்க்க முடிவு செய்துள்ளது. இந்த ஐபிஓ-வில் நிறுவனத்தின் ஆர்வமுள்ள தற்போதைய மற்றும் தகுதியான பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்பையும் ஹெச்டிஎப்சி வங்கி நிர்வாகம் அளிக்க முடிவு செய்துள்ளது.

HDB Financial Services என்பது ஹெச்டிஎப்சி வங்கியின் முக்கியமான ஒருங்கிணைக்கப்படாத நிதியியல் நிறுவனமாகும் அதாவது NBFC பிரிவாகும் ஆகும், இப்பிரிவு ஹெச்டிஎப்சி வங்கி செல்ல முடியாத அடைய முடியாத சில்லறை மற்றும் வணிக பிரிவுகளுக்குச் சேவை அளித்து வருகிறது. இதற்காகப் பல முக்கியமான நிதியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
HDB Financial Services பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன், சொத்துக்கள் மீதான கடன், நுகர்வோர் கடன்கள் மற்றும் சொத்துக்கு எதிரான கடன்களில் நிபுணத்துவம் பெற்றது விளங்குகிறது. HDB-FS இந்தியா முழுவதும் தனிநபர்கள், சிறு வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்குக் கடன் உதவிகளை வழங்கி வருகிறது.
HDB Financial Services 2023ஆம் நிதியாண்டில் தனது கடன் புத்தகத்தில் சுமார் 17% என்ற வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இந்த NBFC நிறுவனம் சுமார் ரூ.66,000 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,740 கோடியாக இருந்தது.


Click it and Unblock the Notifications