ரூ.12500 கோடி HDB ஃபைனான்ஸ் ஐபிஓ விரைவில்.. ரூ.10,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்கும் HDFC வங்கி.!

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஒரு பிரிவான ஹெச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் விரைவில் அதன் ஐபிஓவுடன் வெளிவர தயராக உள்ளது. இந்த ஐபிஓக்கு செபி கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. இந்த ஐபிஓ ரூ.12,500 கோடி மதிப்புடையதாக இருக்கும். இதில் ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.10,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்கிறது.

இந்த ஐபிஓவின் கீழ், புதிய பங்கு விற்பனையானது ரூ. 2,500 கோடி மதிப்புடையதாக இருக்கும். இதன் மூலம் வெளியீட்டின் மொத்த ஐபிஓ அளவு ரூ.12,500 கோடியாக இருக்கும். இதுகுறித்த அறிவிப்பை நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

ரூ.12500 கோடி HDB ஃபைனான்ஸ் ஐபிஓ விரைவில்.. ரூ.10,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்கும் HDFC வங்கி.!

இந்த ஐபிஓ வெளியீடானது எச்டிபி ஃபைனான்சியலின்IPO மூலம் திரட்டப்படும் நிதி நிறுவனம் கடனை அடைக்கவும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை அதிகரிக்கவும் பயன்படுத்தவும், அதேபோல், கடந்த 2022 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளைப் பின்பற்றவும். அதன்படி பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) செப்டம்பர் 2025க்குள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட வேண்டும்

அதாவது கடந்த அக்டோபர் 2022 இல், ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் எச்டிபி நிதிச் சேவைகள் உட்பட மேல் அடுக்கு NBFCகள் மூன்று ஆண்டுகளுக்குள் செப்டம்பர் 2025க்குள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட வேண்டும். இதனடிப்படையில் இந்த ஐபிஓ வெளியாக உள்ளது.

எச்டிஎஃப்சி ஃபைனான்சியல் சர்வீசஸ் என்பது பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கடன்கள், சொத்து நிதி, நுகர்வோர் கடன்கள் மற்றும் சொத்துக்கு எதிரான கடன்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம் ஆகும். எச்டிஎஃப்சி ஃபைனான்சியல் சர்வீசஸ் இந்தியா முழுவதும் உள்ள தனிநபர்கள், சிறு வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நம்பகமான நிதி பங்குதாரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எச்டிஎஃப்சி ஃபைனான்சியல் சர்வீசஸ் என்பது வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். இது சில்லறை மற்றும் வணிகத் துறைகளில் அதன் நிதிச் சேவைகளை வழங்குகிறது.

நிறுவனம் தனது 2023ம் நிதியாண்டிற்க்கான கடன் புத்தகத்தில் ஆண்டுக்கு ஆண்டு 17% வளர்ச்சியை ரூ.66,000 கோடியாக அறிவித்துள்ளது. தனிநபர் கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் சிறு வணிக நிதியுதவி ஆகியவற்றுக்கான வலுவான தேவையே இந்த வளர்ச்சிக்குக் காரணம். அதேசமயம், 23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,740 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஓவில் ஜெப்ரீஸ், ஜேஎம் ஃபைனான்சியல், மோர்கன் ஸ்டான்லி மற்றும் நோமுரா ஆகியவற்றை ஆலோசகர்களாகவும், பாங்க் ஆஃப் அமெரிக்கா, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேபிடல் மற்றும் ஐஐஎஃப்எல் போன்ற நிறுவனங்கள் ஐபிஓவை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களாகவும் இருக்கப்போகின்றன.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+