எச்.டி.எஃப்.சி வங்கியின் துணை நிறுவனமான எச்.டி.பி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் IPO வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த IPO மூலம் ரூ. 12,500 கோடி வரை நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, இந்த ஐபிஓ மூலம் சுமார் 1.49 பில்லியன் டாலர் திரட்ட உள்ளதாக செபியில் புதன்கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எச்.டி.பி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிடக் கடந்த மாதம் எச்டிஎப்சி வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. எச்டிஎப்சி நிர்வாகம் 6 வருடத்திற்குப் பின்பு ஐபிஓ வெளியிடுகிறது. வெறும் 6 வருடத்தில் ஐபிஓ வெளியிட முக்கியமான காரணமும் உள்ளது. ஆர்பிஐ ஒவ்வொரு நிதி குழுமத்தின் தாய் நிறுவனமும் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்ற உத்தரவை விதித்துள்ளது.

இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் தான் எச்.டி.பி பைனான்சியல் சர்வீசஸ் மும்பை பங்குச்சந்தைக்கு வருகிறது. இந்த NBFC வங்கி 2025 செப்டம்பர் வரை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவைப் பெற்றுள்ளது. இந்த உத்தரவு, இந்த நிதி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை, நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் மூலதனத்தைப் பெறுவதற்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செபியில் புதன்கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் எச்.டி.பி பைனான்சியல் சர்வீசஸில் தற்போது 94.6% பங்குகளை எச்.டி.எஃப்.சி வங்கி வைத்திருப்பதாகவும், இந்த IPO மூலம் ரூ. 10,000 கோடி வரை பங்குகளை விற்பனை செய்யும் என்றும், கூடுதலாக, NBFC சொந்தமாக பங்குகளை விற்பனை செய்து ரூ. 2,500 கோடி வரை புதிய பங்குகளை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளது.
IPO-யில் இருந்து கிடைக்கும் வருவாய், எச்.டி.பி பைனான்சியல் சர்வீசஸின் மூலதன அடிப்படையை வலுப்படுத்தவும் அதன் எதிர்கால கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படும். மூலதனத்தை அதிகரிப்பதன் மூலம், நிறுவனம் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, அதிக கடன்களை வழங்கி, அதன் வாடிக்கையாளர் தளத்தை விரிவாக்கம் செய்து பூர்த்தி செய்ய முடியும்.
2007 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எச்.டி.பி பைனான்சியல் சர்வீசஸ், பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்படாத கடன்கள் உள்ளிட்ட பல்வேறு நிதிப் சேவைகளை வழங்குகிறது. இந்தியா முழுவதும் 1,680க்கும் மேற்பட்ட கிளைகளை உடன் மிகப்பெரிய நெட்வொர் வைத்துக்கொண்டு இந்த நிறுவனம் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான நிதி உதவிகளை அளித்து வருகிறது.
இந்த ஆண்டு ஐபிஓ சந்தை மிகவும் சிறப்பானதாக அமைந்தது, இந்தியாவில் சுமார் 270 நிறுவனங்கள் இதுவரை ஐபிஓ மூலம் 12.57 பில்லியன் டாலருக்கும் அதிகமாகத் திரட்டியுள்ளன, இது கடந்த ஆண்டு முழுவதும் திரட்டப்பட்ட 7.42 பில்லியன் டாலரை காட்டிலும் மிகவும் அதிகமாகும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications