தனியார் துறையை சேர்த்த முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், அதன் நிகரலாபம் 18.4% குறைந்து, 7,513 கோடி ரூபாயாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த ஆண்டில் 6,345 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது நிகர வட்டி வருவாய், அதாவது சம்பாதித்த வட்டி விகிதம் மற்றும் செலவிடப்பட்ட வட்டி விகிதத்திற்கு இடையிலான வேறுபாடு, செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 16.7% அதிகரித்து, 15,776.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் சொத்து வளர்ச்சி 21.5% அதிகரித்துள்ளது. அதோடு நிகர வட்டி மார்ஜின் தொகையானது 4.1% அதிகரித்துள்ளதாக பிஎஸ்இ-க்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இவ்வங்கி தெரிவித்துள்ளது.

அதோடு தொடர்ச்சியாக டெபாசிட்டுகளில் கவனம் செலுத்தப்பட்டு வந்ததால், இது பணப்புழக்கத்திற்கு ஏதுவாக அமைந்தது. இது கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 20.30% அதிகரித்து, 12,29,310 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் இவ்வங்கியின் பணப்புழக்க விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதே இந்த வங்கியில் வாராக்கடன் விகிதமானது 1.38% ஆக இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வங்கியின் வட்டி அல்லாத வருவாய் விகிதம் 9% அதிகரித்து, 6,092.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு சில்லறை கடன் விகிதமானது 5.3% அதிகரித்துள்ளது. இதே மொத்த கடன் விகிதமானது 26.5% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கடன் விகிதத்தில் சில்லறை கடன் விகிதமானது 48% அதிகரித்துள்ளது.
எனினும் குறைவான வட்டி விகிதம், வாடிக்கையாளர்களால் டெபிட் கார்டு மற்றும் கிடெடிட் கார்டுகளின் பயன்பாடு, வசூல் விகிதம், சில கட்டணங்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல காரணிகளால் வங்கி பாதிக்கப்பட்டுள்ளதாக ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த வங்கி, சஷிதர் ஜெகதீஷனை கூடுதல் இயக்குனராகவும், நிர்வாக இயக்குனராகவும் நியமித்துள்ளது. வங்கியின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அக்டோபர் 27, 2020 முதல் மூன்று ஆண்டுகளுக்கு வங்கி குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில் இந்த வங்கின் விலையானது வெள்ளிக்கிழமையன்று முடிவில் 29.85 ரூபாய் அதிகரித்து 1,199 ரூபாயாக முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications