எகிறிய வட்டி வருவாய்.. ஹெச்டிஎஃப்சி லாபம் 19.6% அதிகரிப்பு..!

மும்பை: இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையிலான முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அதன் படி இந்த முன்னணி தனியார் வங்கியானது முதல் காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 19.6% நிகரலாபம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எகிறிய வட்டி வருவாய்..  ஹெச்டிஎஃப்சி லாபம் 19.6% அதிகரிப்பு..!

இந்த ஜூன் காலாண்டில் அதன் நிகரலாபம் 6,658.62 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 5,568.16 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் குறைந்த வட்டி விகிதம், அதிகளவிலான வட்டி வருவாய் அதிக லாபத்திற்கு வழிவகுத்ததாக தெரிவித்துள்ளது.

எனினும் நாட்டில் நிலவி வரும் மந்த நிலை காரணமாக பிற வருமானங்கள் குறைவால், லாபம் சற்று மட்டுப்படுத்துள்ளதாகவும் இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 17.8 சதவீதம் அதிகரித்து, 15,665.42 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தவிர 21% ஆரோக்கியமான கடன் வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாகவும், 24.6% டெபாசிட் வளர்ச்சியினையும் பதிவு செய்துள்ளதாகவும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதே காசா (CASA ) டெபாசிட் வளர்ச்சி 26% வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே கால டெபாசிட்கள் 23.7% அதிகரித்துள்ளது. வங்கியின் தொடர்ச்சியான வைப்பு தொகை விகிதமானது ஆரோக்கியமான பணப்புழக்க பாதுகாப்பு விகிதத்தினை 140 சதவீதமாக பராமரிக்க உதவியதாகவும் தெரிவித்துள்ளது.

இதே மற்ற வருவாய் 4,075.30 கோடி ரூபாயாகவும், இது மொத்த வருவாயில் 20.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 4,970.3 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது நாட்டில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் இது சற்று குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் மொத்தம் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 1.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முன்னர் 1.26 சதவீதமாக இருந்தது. மேலும் விவசாய பிரிவைச் தவிர்த்து வாராக்கடன் விகிதமானது 1.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முன்னர் 1.1 சதவீதமாக இருந்தது. எனினும் இந்த ஜூன் காலாண்டி,ல் இந்த வாராக்கடன் விகிதம் 0.33 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் காலாண்டில் 0.36% ஆக இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+