இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக பிரபல ஹெச்.டி.எஃப்சி வங்கி (HDFC). இந்த வங்கியில் பல வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளை வைத்துள்ளனர். இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சஷிதர் ஜகதீஷன் உள்ளார். இவர் மீது, லீலாவதி கீர்த்திலால் மருத்துவ அறக்கட்டளை (Lilavati Kirtilal Mehta Medical Trust - LKMM) மோசடி புகார் அளித்துள்ள நிலையில், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மும்பையைச் சேர்ந்த லீலாவதி கீர்த்திலால் மேத்தா மருத்துவ அறக்கட்டளை சார்பில், கடந்த 2001ஆம் ஆண்டில், அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான 'ஸ்பௌண்டர் ஜெம்ஸ்' என்ற நிறுவனத்திற்கு HDFC வங்கி கடன் வழங்கியுள்ளது. ஆனால், வாங்கிய கடனை லீலாவதி அறக்கட்டளை திரும்பச் செலுத்த தவறியுள்ளது. இதனால், கடன் தொகை கடந்த 2025 மே 31ஆம் தேதி நிலவரப்படி, ரூ.65.22 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, HDFC வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சஷிதர் ஜெகதீஷன், நிதி மோசடி செய்திருப்பதாக லீலாவதி அறக்கட்டளை பரபரப்பு புகார் அளித்தது. அதன்பேரில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சஷிதர் ஜெகதீஷன் கடுமையான நிதி மோசடி செய்தல், குற்றவியல் சதி, பதவியை துஷ்பிரயோகம் செய்தல், சாட்சியங்களை கலைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும், இதனால் அவரை உடனே பணிநீக்கம் செய்து வழக்குத் தொடர வேண்டும் என்றும் லீலாவதி அறக்கட்டளை கூறியுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சுஷிதர் ஜெகதீசன் முற்றிலும் மறுத்துள்ளார். இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் நீண்டகாலமாக செலுத்தாமல் உள்ள கடனை திருப்பிச் செலுத்துவதை தவிர்ப்பதற்காகவே தன் மீது லீலாவதி அறக்கட்டளை புகார் அளித்திருப்பதாக கூறியுள்ளார். இந்த சூழலில் தான், HDFC வங்கி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, லீலாவதி அறக்கட்டளை மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், "எங்களின் அனைத்து பங்குதாரர்களை நினைத்து கவலையில் உள்ளோம். இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், அதைப் பிரச்சாரம் செய்வோர்கள் மீதும் நிபுணர்களின் ஆலோசனையின்படி, வலுவான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளோம் என்று HDFC வங்கி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அறக்கட்டளை கூறும் குற்றச்சாட்டுகள் மற்றும் மறைமுகமான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் கிடையாது. வங்கியோ அல்லது அதன் தலைமை நிர்வாக அதிகாரியோ சட்டவிரோதமான அல்லது எந்தவொரு முறைகேடான செயலிலும் ஈடுபடவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாங்கள் நாட்டின் சட்டங்களுக்கு முழுமையாக இணங்குகிறோம். மிக உயர்ந்த நிர்வாகத் தரங்களையும், நெறிமுறைகளையும் நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இந்த குற்றச்சாட்டுகளின் உள்ளடக்கம், நேரம் மற்றும் விதம், வங்கி அதன் சட்டப்பூர்வ மீட்பு மற்றும் அமலாக்கத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கும் வஞ்சக நோக்கத்தை நிரூபிப்பதாக கூறியுள்ளார்.
ஆனால், பலமுறை பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், சஷிதர் ஜகதீஷன் அல்லது HDFC வங்கி, அறக்கட்டளை உடனான பரிவர்த்தனைகளை இதுவரை அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. அதேபோல், வங்கியின் பல ஆவணங்கள் முரண்பாடாக உள்ளது. ஆரம்பத்தில் ரூ. 4.8 கோடி என்றும், பிறகு ரூ. 450 கோடி என்றும், இப்போது ரூ. 65.22 கோடி கடன் தொகை இருப்பதாக HDFC வங்கியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக லீலாவதி அறக்கட்டளை குற்றம்சாட்டியுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications