சென்னை: பொதுவாக FD திட்டங்களை பல வங்கிகளும், சிறு நிதி நிறுவனங்களும், NBFC நிறுவனங்களும் வழங்குகின்றன. அவற்றில் எவை அதிக வட்டியை தருகிறது என்று பார்த்து பலரும் FD-களில் முதலீடு செய்கின்றனர். என்னதான் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், FD-களை பாதுகாப்பான முதலீடாக மக்கள் கருதுகின்றனர். இதுபோன்ற நபர்களின் நம்பிக்கைக்கு கை கொடுக்கும் வகையில் பல வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு FD வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில் தற்போது HDFC பேங்க் FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது.
ஜூன் 10, 2024 முதல் நடைமுறைக்கு வரும் ரூ. 2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை HDFC பேங்க் திருத்தியுள்ளது. இது வெவ்வேறு காலகட்டங்களில் முதலீடு செய்யும் பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இருவருக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HDFC பேங்க் வழங்கும் புதிய FD வட்டி விகிதங்கள்: HDFC பேங்க் இப்போது 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD டெபாசிட்களுக்கு 3% முதல் 7.25% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
அதிகபட்ச வட்டி விகிதம் 7.25 சதவீதம் 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குக் கிடைக்கும்.
FD திட்ட வட்டி விகிதங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள்:
2 ஆண்டுகள், 11 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை: 7% முதல் 7.15% வரை அதிகரித்துள்ளது.
2 ஆண்டுகள், 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை: 7% முதல் 7.15% வரை அதிகரித்துள்ளது.
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை: 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.20% உயர்ந்துள்ளது.
4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.20% உயர்ந்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்:
நிலையான விகிதங்களை விட 0.50% பிரீமியத்துடன், மூத்த குடிமக்கள் அதிகரித்த விகிதங்களில் FD திட்டத்தின் பயன்களைப் பெற முடியும்.
HDFC பேங்கின் தொடர் வைப்பு நிதி (RD) வட்டி விகிதங்கள்: HDFC பேங்க் 27 மற்றும் 36 மாத காலத்திற்கான தொடர் வைப்பு நிதிக்கு வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது, பொது வாடிக்கையாளர்களுக்கு 7.15% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.65% வட்டி வழங்குகிறது. 39, 48 மற்றும் 60 மாத காலத்திற்கு, வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 7.20% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.70% வட்டி வழங்குகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications