சென்னை: HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. வங்கியின் சிஸ்டம் அப்கிரேட் பணிகள் (System Upgrade) காரணமாக, வரும் ஜூன் 4, 2024 (செவ்வாய்க்கிழமை) மற்றும் ஜூன் 6, 2024 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு டெபிட், கிரெடிட் மற்றும் ப்ரீபெய்டு கார்டு சேவைகள் தற்காலிகமாக குறிப்பிட்ட நேரங்களில் கிடைக்காது என்று வங்கி தெரிவித்துள்ளது.
HDFC வங்கியின் டெபிட், கிரெடிட் மற்றும் ப்ரீபெய்ட் கார்டு பரிவர்த்தனைகள் ஜூன் 4, 2024 அன்று 12:30 AM முதல் 2:30 AM வரை மற்றும் ஜூன் 6 அன்று 12:30 AM முதல் 2:30 AM வரை கிடைக்காது என்று HDFC வங்கியின் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பப்பட்டது.

ஜூன் 4, 2024 மற்றும் ஜூன் 6, 2024 ஆகிய 2 நாட்களில் வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட சேவைகளைப் பயன்படுத்த முடியாது. அவை எந்தெந்த சேவைகள் என்பதைப் பார்ப்போம்.
அனைத்து டெபிட், கிரெடிட், ப்ரீபெய்ட் கார்டு சேவைகளும் HDFC வங்கியின் ATM, POS (கார்டு ஸ்வைப் மெஷின்), ஆன்லைன் (பேமெண்ட் கேட்வே போர்டல்) மற்றும் நெட்சேஃப் (Netsafe) பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக கிடைக்காது.
HDFC வங்கி ரூபே கார்டுகள் வேலை செய்யுமா?: HDFC வங்கி அல்லாத, பிற பேமெண்ட் கேட்வேகளில் கூட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு HDFC வங்கி ரூபே கார்டுகள் இந்த இரண்டு நாட்களிலும் வேலை செய்யாது.
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு மெயில் மற்றும் SMS மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கி சேவைகள் செயலிழக்கும் இந்த இரண்டு நாட்களில் அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால், பிற கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம் அல்லது வேறு வங்கி கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். HDFC வங்கி சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதும், எந்தவித தடைபாடும் இல்லாமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
சமீபத்தில் SMS அறிவிப்புகளுக்கான வரம்புகளை HDFC பேங்க் அமைத்தது. அதன்படி, HDFC பேங்க் வாடிக்கையாளர்கள் இப்போது ரூ. 100 மற்றும் ரூ. 500 ஆகியவற்றுக்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே SMS அறிவிப்புகளைப் பெறுவார்கள். நீங்கள் ரூ. 100 பணம் அனுப்பினால் SMS அறிவிப்புகளைப் பெறுவீர்கள். அதேபோல ரூ. 500 ரூபாய்க்கு மேல் பணம் பெறப்பட்டால் உங்களுக்கு SMS அறிவிப்புகள் வரும். அனால் எல்லா UPI பரிவர்தனைகளுக்கும் உங்களுக்கு மெயில் அறிவிப்புகள் வழங்கப்படும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications