கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு HDFC பேங்க் அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவித்துள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், வாடகை, எரிபொருள் மற்றும் பிற பயன்பாட்டு கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் கிரெடிட் கார்டு செலவுகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.
PayTM, CRED, MobiKwik, Cheq மூலம் செய்யப்படும் வாடகை பரிவர்த்தனைகளுக்கு 1% கட்டணம் விதிக்கப்படும். இந்த கட்டணம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.3000 ஆகும்.

பொதுப்பயன்பாட்டு பில்கள் (Utility bill): ரூ.50,000-க்கும் குறைவான தொகையுள்ள பரிவர்த்தனைகள் இதனால் பாதிக்கப்படாது. ஆனால் அதற்கு மேற்பட்ட தொகைக்கு 1 % கட்டணம் விதிக்கப்படும். அதிகபட்ச கட்டணமாக ரூ.3000 வரை இருக்கலாம். காப்பீடு தொடர்பான பரிவர்த்தனைகள் இந்த புதிய கட்டணங்களுக்கு உட்படாது.
கல்வி கட்டணங்கள்: CRED மற்றும் PayTM மூலம் செய்யப்படும் கல்வி கட்டணங்களுக்கு 1 % கட்டணம் விதிக்கப்படும். கல்வி நிறுவனங்களின் வலைத்தளங்கள் அல்லது POS இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் கட்டணங்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை. சர்வதேச கல்வி கட்டணங்களுக்கு இந்தப் புதிய கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
சர்வதேச பரிவர்த்தனைகள்: அனைத்து கிராஸ்-கரன்சி பரிவர்த்தனைகளுக்கும் 3.5% மார்க்அப் கட்டணத்தை HDFC பேங்க் விதிக்கவுள்ளது. வெளிநாட்டில் அடிக்கடி பொருட்களை வாங்கி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை இது பாதிக்கும்.
எரிபொருள் பரிவர்த்தனைகள்: ரூ.15,000-க்கும் மேற்பட்ட தொகைகளுக்கு 1 % கட்டணம் விதிக்கப்படும். அதிகபட்சம் இந்தக் கட்டணம் ரூ.3000 வரை இருக்கும்.
செயலாக்கக் கட்டணம்: Easy-EMI வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கும் பொருட்களை EMI-களாக மாற்றுவதற்கு, 299 ரூபாய் வரை செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ரிவார்டுகள்: HDFC வங்கி, Tata Neu Infinity மற்றும் Tata Neu Plus கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கான ரிவார்டுகளை மேம்படுத்தியுள்ளது. Tata Neu Infinity HDFC வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் Tata Neu UPI ஐடி மூலம் செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளில் 1.5 % NeuCoins-ஐப் பெறுவார்கள். அதே நேரத்தில் பிற UPI ஐடிகளுடன் பரிவர்த்தனை செய்தால் 0.50 % NeuCoins கிடைக்கும்.
Tata Neu Plus HDFC வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், Tata Neu UPI ஐடியுடன் UPI பரிவர்த்தனை செய்யும் போது 1% NeuCoins மற்றும் பிற UPI ஐடிகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் போது 0.25% NeuCoins பெறுவார்கள்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications