சென்னை: இந்தியாவில் பல்வேறு வங்கிகள் தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளன. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வர உள்ளதால் மக்கள் அனைவரும், உஷார் கிரெடிட் கார்டு மூலம் பண பரிமாற்றத்தை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இருக்கும் ஹெச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ள புதிய மாற்றங்களை இப்போது பார்ப்போம்.
HDFC வங்கி கிரெடிட் கார்டுகள் வைத்துள்ள அனைவரும் இதுவரையில் தாங்கள் செய்து வந்த பல்வேறு பேமெண்ட்களில் பல சலுகைகளைப் பெற்றிருக்கக் கூடும், ஆனால் இனி வரும் நாட்களில் சில சலுகைகள் குறைக்கப்பட உள்ளது.

வாடகை பேமெண்ட்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் CRED, PayTM, Cheq, MobiKwik, Freecharge போன்ற சேவைகளைப் பயன்படுத்தி வாடகை செலுத்தினால், பரிவர்த்தனைத் தொகையில் 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3000 வரை வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல் பேமெண்ட்:
கன்ஸ்யூமர் கிரெடிட் கார்டு: ஒரு சிங்கிள் பரிமாற்றத்தில் ரூ.15,000-க்கும் குறைவாக பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால் கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால் ரூ.15,000-க்கும் அதிகமாக வாங்கினால் மொத்தத் தொகையில் 1% கட்டணம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3000 வரை விதிக்கப்படும்.
வணிக கார்டுகள்: ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.30,000-க்கும் குறைவாக பெட்ரோல் வாங்கினால் கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால் ரூ.30,000-க்கும் அதிகமாக வாங்கினால் மொத்தத் தொகையில் 1% கட்டணம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.3000 வரை விதிக்கப்படும்.
சர்வதேச பரிமாற்றங்கள்: சர்வதேச அல்லது வெளிநாட்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு 3.5% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். இன்ஃபினியா, இன்ஃபினியா (மெட்டல் எடிஷன்), டைனர்ஸ் பிளாக், டைனர்ஸ் பிளாக் (மெட்டல் எடிஷன்), பிஸ் பிளாக் மெட்டல் கார்டு, ரெகாலியா கோல்ட், பிஸ் பவர், டாட்டா நியூ இன்ஃபினிட்டி HDFC வங்கி கார்டுகளுக்கு ஏற்கனவே இருக்கும் 2% கட்டணம் தொடரும். இதோடு 6E ரிவார்ட்ஸ் இண்டிகோ எக்ஸ்எல் கார்டுக்கு 2.5% கட்டணம் தொடரும்.
ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு லாயல்டி திட்டம்: சில கிரெடிட் கார்டுகளுக்கான லாயல்டி திட்டத்தை ஹெச்டிஎப்சி வங்கி மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகள் செப்டம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். இந்த மாற்றங்கள் காரணமாக கிரெடிட் கார்டு பயனர்கள் தங்களின் செலவு செய்யும் பழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications