HDFC வங்கியில் ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? உங்களுடைய EMI குறையப் போகுது! ஆனா ஒரு கண்டிஷன்!

HDFC பேங்க் கடன்களுக்கான MCLR விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்து அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எம்சிஎல்ஆர் விகிதம் 8 சதவீதம் முதல் 8.65 சதவீதம் வரை இருந்த நிலையில், தற்போது 7.90% முதல் 8.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம் குறைந்த காரணத்தினால் எல்லா கடன் பெற்றவர்களுக்கும் உடனடியாக மாத தவணை குறையாது. உங்கள் கடன் எந்த பென்ச்மார்க் விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும், வங்கி வசூலிக்கும் கூடுதல் வட்டி விகிதத்தை பொருத்துமே அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு வட்டி குறைக்கப்படும்.

HDFC வங்கியில் ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? உங்களுடைய EMI குறையப் போகுது! ஆனா ஒரு கண்டிஷன்!

எந்தெந்த கால அளவுக்கு எவ்வளவு வட்டி?:

கால அளவுபழைய வட்டி விகிதம்புதிய வட்டி விகிதம்
1 மாதம்8%7.90%
3 மாதங்கள்8.15%8.05%
6 மாதங்கள்8.30%8.25%
1 வருடம்8.40%8.35%
2 வருடங்கள்8.55%8.45%
3 வருடங்கள்8.65%8.60%

100 bps என்றால் 1 சதவீதத்திற்கு சமம், 10 bps என்றால் 0.10 சதவீதத்திற்கு சமம். தற்போதைய வட்டிக் குறைப்பின் காரணமாக ஒவ்வொரு வாடிக்கையாளரும் 0.10 சதவீத வட்டி குறைப்பை எதிர்பார்க்கலாம்.

எம்சிஎல்ஆர் விகிதம் குறைந்தாலும் ஏன் வாடிக்கையாளர்களுக்கு உடனே வட்டி குறைவதில்லை?: நீங்கள் கடன் வாங்கும் போது ஒரு அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டிருப்பீர்கள். அதில் கடன் குறித்த பல விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ரீசெட் டேட் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதாவது எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன்களுக்கு எப்போது வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படும் என்பதை நிர்ணயிப்பது இந்த தேதி தான். ஒவ்வொரு வங்கியின் விதிமுறைகளை பொறுத்து மாதத்திற்கு ஒருமுறை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை இந்த வட்டி விகிதம் புதுப்பிக்கப்படும்.

எனவே நீங்கள் பெற்ற கடனுக்கான ரீசெட் தேதி எப்போது வருகிறதோ அந்த தேதியில் இருந்து வட்டி குறைப்பின் பலன் உங்களுக்கு கிடைக்கத் தொடங்கும். மேலும் தனியார் வங்கிகள் தங்களுடைய வட்டி விகிதத்தை வெறும் எம்சிஎல்ஆர் விகிதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்காது. அதோடு அவர்கள் நிர்ணயிக்கும் ஸ்பிரெட் எனப்படும் வட்டி எல்லாம் சேர்த்து தான் இறுதி வட்டியின் நிர்ணயிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+