இந்தியாவின் மிக முக்கியமான தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச் டி எஃப் சி வங்கியின் காலாண்டு முடிவுகள் இன்று (ஜனவரி 18, 2020) வெளியாகி இருக்கின்றன. மசால் வடை மசால் வடை தான் என்கிற ரீதியில் ஹெச் டி எஃப் சி வங்கி ஒரு தனியார் நிறுவனம் தான் என்பதை மீண்டும் தன் டிசம்பர் 2019 காலாண்டில் காட்டி இருக்கிறது.
ஹெச் டி எஃப் சி வங்கி, இந்த டிசம்பர் 2019 காலாண்டில் 7,416 கோடி ரூபாயை நிகர லாபமாகக் காட்டி இருக்கிறது. கடந்த டிசம்பர் 2018-ல் ஹெச் டி எஃப் சி வங்கியின் நிகர லாபம் வெறும் 5,585 கோடியாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக கடந்த டிசம்பர் 2018-ஐ விட டிசம்பர் 2019-ல் நிகர லாபம் 32.77 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அதே ஹெச் டி எஃப் சி வங்கி, இந்த டிசம்பர் 2019 காலாண்டில் 7,015 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டலாம் என ப்ளூம்பெர்க் நிறுவனம் கணித்து இருந்தது. அந்த கணிப்பை விட அதிக நிகர லாபத்தை ஹெச் டி எஃப் சி வங்கி சம்பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து நிகர வட்டி வருமானத்துக்கு வருவோம். அது என்ன நிகர வட்டி வருமானம். கடன் மூலம் வங்கிகளுக்கு வந்த மொத்த வட்டி - டெபாசிட்களுக்கு வங்கி கொடுத்த மொத்த வட்டி = நிகர வட்டி வருமானம்.
இந்த நிகர வட்டி வருமானமும், கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் 12.69 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். டிசம்பர் 2019 காலாண்டின் நிகர வட்டி வருமானம் 4,172 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய டிசம்பர் 2018 காலாண்டில் நிகர வட்டி வருமானம் 12,576 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச் டி எஃப் சி வங்கியின் நிகர வாராக் கடன் 0.48 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறதாம். இது கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 0.42 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications