வீட்டுக் கடன் வாங்குவதைத் திட்டமிட்டு இருக்கும் நபர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. HDFC பேங்க் தனது கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இது வீட்டுக் கடன் உட்பட பல்வேறு கடன்களுக்கான மாத EMI தொகையை அதிகரிக்கக் கூடும். இந்தக் கட்டுரையில் HDFC வங்கியின் சமீபத்திய MCLR உயர்வு, பிற வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுக் கடன் விகிதங்கள் ஆகிய தகவல்களை பார்ப்போம்.
MLCR (Marginal Cost of Funds Based Lending Rates) என்றால் என்ன?: MLCR என்பது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான லெண்டிங் ரேட் என்று கூறுவர். இது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட விகிதமாகும்.

இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன்கள் ஆனாலும் சரி அல்லது புதிய கடன்கள் ஆனாலும் சரி, வட்டி விகிதங்கள் இருக்கும். MLCR விகிதம் அதிகரிக்கும் போது கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கலாம். MLCR விகிதம் குறையும் போது கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையலாம்.
சுருக்கமாக சொல்லப்போனால், MCLR என்பது வங்கிகள் கடன் வழங்கும்போது வழங்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆகும். வங்கிகள் இதற்கும் குறைவான வட்டிக்கு கடன் தர முடியாது. ஆனால், இதை விட அதிக வட்டி விதிக்கலாம்.
HDFC பேங்க், ஜூலை 8-ஆம் தேதி அன்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடன் வட்டி விகிதத்தை உயர்த்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடன் விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை அதிகரித்துள்ளது. HDFC வங்கி MCLR வட்டி விகிதங்கள் இப்போது 9.05% முதல் 9.40% வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்படாத வரையில், கடன் வாங்குபவர்களுக்கு இந்த விகித வரம்பு தான் வழங்கப்படும்.
ஜூலை 08, 2024 முதல் நடைமுறைக்கு வரும் HDFC பேங்க் MCLR விகிதங்கள்:
1 மாதம் கால கடன்களுக்கு: 9.10 சதவீதம்
3 மாதம் கால கடன்களுக்கு: 9.20 சதவீதம்
6 மாதம் கால கடன்களுக்கு: 9.35 சதவீதம்
1 ஆண்டு கால கடன்களுக்கு: 9.40 சதவீதம்
2 ஆண்டு கால கடன்களுக்கு: 9.40 சதவீதம்
3 ஆண்டு கால கடன்களுக்கு: 9.40 சதவீதம்
HDFC பேங்கின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்: HDFC பேங்க் வீட்டு கடன்களுக்கு ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் நிலையானதாக இருக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டி விகிதமே நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அதன் பிறகு அவை ப்லோட்டிங் இன்ட்ரெஸ்ட் ரேட் ஆக மாற்றமடைகிறது. அதன் பிறகு வட்டி விகிதங்கள் மாறக்கூடும்.
அனைத்து வட்டி விகிதங்களும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை (Repo Rate) அடிப்படையாகக் கொண்டவை. தற்போதைய ரெப்போ விகிதம் 6.50% ஆகும்.
வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்: சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான வீட்டுக் கடன் விகிதங்கள், ரெப்போ விகிதம் + 2.25% முதல் 3.15% வரை இருக்கும். அதாவது 8.75% முதல் 9.65% வரை இருக்கும். இதில் லாப வட்டி விகிதமும் இருக்கலாம்.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications