மக்களுக்கு ஷாக் கொடுத்த HDFC வங்கி.. RBI ரெப்போ விகிதம் குறைத்த பின்பும் வட்டி உயர்வு..!

எச்டிஎப்சி வங்கி தனது கடன் வழங்கும் விகிதத்தை (MCLR) 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதன்படி, எச்டிஎப்சி வங்கியின் MCLR விகிதம் 9.20% முதல் 9.45% வரை இருக்கும். இந்த புதிய மாற்றங்கள் பிப்ரவரி 7, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.

குறிப்பாக, ஒரே நாள் கடனுக்கான MCLR விகிதம் 9.15% -லிருந்து 9.20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற கால அளவுகளுக்கான MCLR விகிதங்கள் மாற்றமடையவில்லை. ஒரு மாத கால MCLR 9.20% ஆகவும், மூன்று மாத கால MCLR 9.30% ஆகவும், ஆறு மாதம் மற்றும் ஒரு வருட கால MCLR ஆகியவை 9.40% ஆகவும், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருட கால MCLR ஆகியவை 9.45% ஆகவும் தொடர்கின்றன.

மக்களுக்கு ஷாக் கொடுத்த HDFC வங்கி.. RBI ரெப்போ விகிதம் குறைத்த பின்பும் வட்டி உயர்வு..!

MCLR என்பது வங்கிகள் கடன் வழங்கும் போது குறைந்தபட்சமாக வசூலிக்க வேண்டிய வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி இதைவிட குறைவான விகிதத்தில் வங்கிகள் கடன் வழங்க முடியாது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

ரிசர்வ் வங்கி 2016 ஆம் ஆண்டில் MCLR முறையை அறிமுகப்படுத்தியது. வீட்டுகடன், பர்சனல் லோன், கார் கடன் போன்ற ப்ளோட்டிங் வட்டி விகிதம் கொண்ட கடன்களின் வட்டி விகிதத்தை தீர்மானிப்பதில் MCLR முக்கிய பங்கு வகிக்கிறது.

MCLR மாற்றத்திற்கு கூடுதலாக, எச்டிஎப்சி வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் (Base Rate) செப்டம்பர் 9, 2024 முதல் 9.45% ஆக திருத்தப்பட்டது. வங்கியின் பெஞ்ச்மார்க் பி.பி.எல்.ஆர் (BPLR) விகிதமும் செப்டம்பர் 9, 2024 முதல் ஆண்டுக்கு 17.95% ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எச்டிஎப்சி வீட்டு கடன்களுக்கு, வட்டி விகிதங்கள் பொதுவாக ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கடன் காலம் முழுவதும் மாறக்கூடும். பிப்ரவரி 7, 2025 நிலவரப்படி, சம்பளம் வாங்கும் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுகடன் வட்டி விகிதம் 9.40% முதல் 9.95% வரை உள்ளது. சிறப்பு விகிதங்கள், தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து, 8.75% முதல் 9.65% வரை மாறுபடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+