சென்னை: தற்போது கிரெடிட் கார்டுகள், நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. விமான டிக்கெட் முன்பதிவு போன்றவற்றை எளிதாக செய்ய முடிவதால் அனைவரும் தங்களின் செலவுக்கு ஏற்றக் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கிரெடிட் கார்ட்கள் மூலம் செலவு செய்யும் போது கேஷ்பேக்குகள், ரிவார்ட் பாயிண்ட்கள் போன்ற சிறப்பு சலுகைகளைப் பெற முடியும். இந்நிலையில் HDFC பேங்க் விர்ச்சுவல் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த உள்ளது.
HDFC பேங்க் புதிதாக விர்ச்சுவல் கிரெடிட் கார்டை பிக்சல் (PIXEL) என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார்டு இரண்டு வகைகளாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அவை PIXEL பிளே மற்றும் PIXEL கோ. HDFC பேங்க் அறிமுகப்படுத்தும் விர்ச்சுவல் கிரெடிட் கார்டு, முழுமையாக மொபைல் ஆப்-ஐ கொண்டு செயல்படக்கூடிய கிரெடிட் கார்டு ஆகும்.

இந்த விர்ச்சுவல் கிரெடிட் கார்டுகளில் நிறைய முக்கிய அம்சங்கள் உள்ளன. அவற்றில், உங்கள் லைஃப் ஸ்டைலுக்கு ஏற்றவாறு பலன்களைத் தரும் வகையில், இந்தக் கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல இந்தக் கிரெடிட் கார்டு மூலம், உங்களுடைய பில்லிங் தேதியை, நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்.
பிக்சல் பிளே மற்றும் பிக்சல் கோ ஆகிய கிரெடிட் கார்டுகள் தனித்தனி பலன்களை கொண்டிருக்கின்றன. பிக்சல் பிளே ஆரம்ப நிலை பயனர்களுக்கு வடிவமைக்கப்பட்டது. இந்த இரண்டு கார்டுகளுக்கும் சுமார் ரூ. 500 ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும்.
பிக்சல் கார்டின் முக்கிய அம்சங்கள்: உணவு, டிராவல், ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், மளிகை போன்ற ஷாப்பிங்கிற்கு கேஷ்பேக் பெற முடியும். இதன் மூலம் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த பட்ஜெட்டுக்கு ஏற்ற EMIகளாக பிரித்துக் கொள்ளலாம். உங்கள் பரிவர்த்தனைகள் மற்றும் ரிவார்டுகளை நேரடியாக PayZapp ஆப்-இல் பார்த்துக் கொள்ளலாம்.
PIXEL கார்டுகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?: PIXEL கார்டு பெற புதிய வாடிக்கையாளர்களும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களும் PayZapp ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம். கிரெடிட் கார்டு பயனர்கள் ரிவார்ட், EMI டாஷ்போர்டு, அறிவிப்புகள், அறிக்கைகள், சமீபத்திய பரிவர்த்தனைகள் போன்ற அம்சங்களை PayZapp ஆப்-ஐ கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
PIXEL கிரெடிட் கார்டுகளை ஸோமேட்டோ, மிந்த்ரா, புக் மை ஷோ, மேக் மை ட்ரிப், அமேசான், பிளிப்கார்ட் போன்ற விருப்பமான தளங்களைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. இதில் பயனர்கள் செலவு செய்யும் தொகைக்கு ஏற்ப கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஸ்வைப் அல்லது டேப் செய்து பேமெண்ட் செலுத்தும் வசதி இந்த டிஜிட்டல் கிரெடிட் கார்டில் வழங்கப்படுகிறது. தற்போது விசா நெட்வொர்க்-இல், இந்த கார்டு வேலை செய்கிறது. விரைவில் பிற நெட்வொர்க்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று HDFC பேங்க்-இன் டிஜிட்டல் பேங்கிங் ஆபிஸர் பராக் ராவ் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications