HDFC bank: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, தனது மார்ச் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, அதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது 24% அதிகரித்துள்ளது. இதே அதன் நிகர லாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 20 சதவீதம் எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதே இதன் மொத்த வருவாய் விகிதமானது 31 சதவீதம் அதிகரித்து, 53,851 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 21% அதிகரித்து, 12,594.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஒருங்கிணைந்த நிகர வருவாய் விகிதமானது 20.3% அதிகரித்து, 34,552.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 28,733.9 கோடி ரூபாயாக இருந்தது.
இதே வரிக்கு முந்தைய லாபம் 15,935.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வரிக்கு பிந்தைய லாபம் என்பது 3888.1 கோடி ரூபாயாக உள்ளது. இவ்வங்கியின் நிகர லாபம் 12,047.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 19.8% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
இதே நிகர வட்டி வருவாய் என்பது 23.7% அதிகரித்து, 23,351 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 18,872 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கியின் லாபம் 12,181 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என ஆய்வறிக்கைகள் சுட்டி காட்டிய நிலையில், இது குறைந்துள்ளது. இதன் நிகர வட்டி வருவாய் விகிதமும் கடந்த ஆண்டினை காட்டிலும் 30.5 சதவீதமாகவும், கடந்த காலண்டினை காட்டிலும் 24,601.9 கோடி ரூபாயாகவும் இருந்தது.
வட்டி வருவாய் அதிகரித்துள்ள சூழலில் இதன் டெபாசிட் விகிதமும் நல்ல வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இது 1,883,395 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே மொத்த அட்வான்ஸ் மார்ச் 31, 2023 அன்று 1,600,586 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 16.9 சதவீதம் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

இதே உள் நாட்டில் வழங்கப்பட்ட சில்லறை கடன் வளர்ச்சியானது 20.8% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இதே வணிகம் மற்றும் கிராமப்புற வங்கி கடன் வளர்ச்சியானது 29.8 சதவீதம் எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே கார்ப்பரேட் மற்றும் மொத்த கடன் வளர்ச்சியானது 12.6% எனும் அளவுக்கும் வளர்ச்சி கண்டுள்ளது.
மொத்த செயல்படாத சொத்தின் மதிப்பு 1.12% ஆகவும், இது கடந்த காலாண்டில் 1.23% ஆகவும் இருந்தது. இதே கடந்த ஆண்டில் 1.17% ஆகவும் இருந்தது. இதே நிகர செயல்படாத சொத்தின் மதிப்பு 0.27% ஆகவும் உள்ளது.
லாபமானது எதிர்பார்ப்பினை காட்டிலும் குறைந்திருந்தாலும், இவ்வங்கி முதலீட்டாளர்களுக்கு மார்ச் 31வுடன் முடிவடைந்த வருடத்திற்கு 19 ரூபாய் டிவிடெண்டாக கொடுக்க பரிந்துரை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு 15.5 ரூபாயாக கொடுத்தது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications