தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின், சந்தை மூலதனமானது 8 டிரில்லியன் ரூபாயினை தொட்டுள்ளது.
புதன் கிழமையன்று அதன் பங்கு விலையானது 1,646 என்ற புதிய உச்சத்தினை தொட்டது. ஆக தனியார் வங்கியான இது, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் மூன்றாவது சந்தை மதிப்பினை எட்டியுள்ளது.
பிஎஸ்இ-யில் இவ்வங்கியின் பங்கு விலையானது கிட்டதட்ட 2 சதவீதம் அதிகரித்து, ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கானது புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. காலை 9.17 மணியளவில் இதன் சந்தை மூலதனம் 8.02 டிரில்லியன் ரூபாய் என்று பிஎஸ்இ தரவுகள் காட்டுகின்றன. இதனுடன் ஒப்பிடும்போது பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 0.54% அதிகரித்து 44,765 புள்ளிகளாக காணப்படுகிறது. இதுவும் இன்று அதன் புதிய உச்சத்தினை எட்டியுள்ளது.

தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 13.34 டிரில்லியன் ரூபாய் சந்தை மதிப்பினை எட்டி முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் 10.19 டிரில்லியன் ரூபாய் மதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதே மூன்றாவது இடத்தில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் 4.08 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலும், இதே இன்ஃபோசிஸ் நிறுவனம் 4.83 டிரில்லியன் ரூபாய் மதிப்பில் நான்காவது இடத்திலும் உள்ளதாக பிஎஸ்இ தரவுகள் மூலம் அறியப்படுகிறது.
கடந்த மாதத்தில் எஸ் & பி சென்செக்ஸ்-க்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கி 17% என்ற அளவில் ஏற்றம் கண்டு, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தினை கொடுத்தது. இதே காலகட்டத்தில் எஸ் & பி சென்செக்ஸ் 10% மட்டுமே ஏற்றம் கண்டது.
இதே கடந்த மூன்று மாதங்களில், தனியார் துறையை சேர்ந்த இந்த கடன் வழங்குனரின் பங்கு மதிப்பானது 30% அதிகரித்துள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் பெஞ்ச் மார்க் குறியீடுகள் 15% லாபத்தில் இருந்தது.
கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டின் இந்த வங்கியின வட்டி வருவாய் மற்றும் பிற வருவாய்கள் கணிசமாக வளர்ச்சி கண்டுள்ளன. இதனையடுத்து இவ்வங்கியின் நிகரலாபம் ஆண்டுக்கு 18.4% அதிகரித்து 7,513 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் இவ்வங்கியின் வட்டி வருவாய் 16.7% அதிகரித்து, 15,776 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சொத்து வளர்ச்சியும் 21.5% வளர்ச்சி கண்டுள்ளது.
இதே மொத்தம் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 1.08% ஆக சரிந்தது. இது ஒரு வருடம் முன்பு 1.38% ஆக இருந்தது. அதே போல் நிகர வாரக்கடன் விகிதமும் 0.42%ல் இருந்து 0.17% ஆக குறைந்துள்ளது. டிஜிட்டல் உட்புகுத்தல், பண்டிகை காலகட்டத்தில் வலுவான சில்லறை கடன் வளர்ச்சி ஆகியவை இந்த வங்கியின் முன்னோக்கிய வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்ததாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications