HDFC வாடிக்கையாளர்களே! ஈஎம்ஐ கட்றீங்களா? வட்டி குறைஞ்சிடுச்சு! யாருக்கெல்லாம் லாபம் தெரியுமா?

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியாக இருக்கும் HDFC பேங்க் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்துள்ளது. ஏற்கனவே கடன் பெற்றவர்கள் புதிதாக கடன் பெற நினைப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சூழலில் மக்கள் தனி நபர் கடன், வீட்டுக் கடன் என வங்கிகள் வழங்கும் கடன்களை பெரிதும் நம்பி இருக்கின்றனர். அப்படி இருக்கையில் கடன் வாங்க யோசித்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு சாதகமான சூழலே தென்படுகிறது.

என்னென்ன மாற்றங்கள்?: HDFC பேங்க் குறுகிய கால கடன்களுக்கான MCLR விகிதத்தை குறைத்து அறிவித்துள்ளது. அதேபோல நீண்ட கால கடன்களுக்கான வட்டி விகிதத்திலும் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

MCLR என்றால் என்ன?: MCLR என்பது "மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் பேஸ்டு லெண்டிங் ரேட்" என்பதன் சுருக்கம். அதாவது ஒரு வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதம். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் MCLR என்பது மக்கள் பெறும் வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் என அனைத்திற்கும் வங்கியால் நிர்ணயிக்கப்படும் ஒரு அளவுகோல் அவ்வளவுதான்.

HDFC வாடிக்கையாளர்களே! ஈஎம்ஐ கட்றீங்களா? வட்டி குறைஞ்சிடுச்சு! யாருக்கெல்லாம் லாபம் தெரியுமா?

MCLR விகிதம் குறைய குறைய உங்கள் ஈஎம்ஐ தொகையும் குறையும். அதுவே MCLR விகிதம் அதிகரித்தால் ஈஎம்ஐ தொகையும் அதிகரிக்கும். ஈஎம்ஐ குறையும் போது நீங்கள் வங்கிக்கு செலுத்தும் வட்டியும் குறையக்கூடும். எனவே நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு MCLR விகிதத்தில் செய்யப்படும் சிறு மாற்றம் கூட பெரிய சேமிப்பிற்கு உதவியாக இருக்கும்.

பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு MCLR விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. வங்கிக்கு நிதி திரட்ட செய்யப்படும் செலவு, வங்கியின் செயல்பாட்டுச் செலவுகள், ரெப்போ விகிதம் இப்படி பல விஷயங்களைக் கருத்தில் கொண்டுதான் MCLR கணக்கிடப்படுகிறது. இந்த விகிதம் தான் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய குறைந்தபட்ச வட்டி விகிதம். இந்த விகிதத்திற்கு கீழ் வங்கிகள் கடன் தராது.

MCLR விகிதம் குறைந்தால் ஏற்படும் நன்மை என்ன?: இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். நீங்கள் ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து அங்கு ஹோம் லோன் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வங்கியை பொருத்தவரையில் இரண்டு முறையாக வட்டி வசூலிக்கப்படும். ஒன்று பிக்சட் இன்ட்ரஸ்ட் ரேட். அதாவது நீங்கள் பெற்ற கடனுக்கான வட்டி கடன் காலம் முழுவதும் மாற்றம் இன்றி இருக்கும். மற்றொன்று ஃபுலோட்டிங் இன்ட்ரஸ்ட் ரேட். இதில் வட்டி MCLR விகிதம் குறையும் போது குறையும். அதுவே MCLR விகிதம் அதிகரித்தால் வட்டியும் அதிகரிக்கும்.

தற்போது HDFC பேங்க் ஓவர் நைட் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.10 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைத்துள்ளது. அதேபோல மூன்று மாத கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.20 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக மாற்றியுள்ளது.

ஒரு வருட கடன்களுக்கான MCLR விகிதம் மாற்றமின்றி 8.35 சதவீதத்தில் தொடர்கிறது. அதேபோல 2 ஆண்டு கடன்களுக்கான MCLR விகிதம் 8.45 சதவீதத்தில் இருக்கிறது. ஆனால் 3 ஆண்டு கடன்களுக்கான விகிதம் 8.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுமார் ஐந்து அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு தென்படுகிறது.

2026-ஆம் ஆண்டின் மே 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வட்டி விகிதங்கள் குறிப்பாக குறுகிய கால கடன் பெற்றவர்களுக்கு ஈஎம்ஐ சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஏப்ரல் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்திற்கு முன்பு HDFC பேங்க் வட்டி விகிதத்தை குறைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+