இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்திருக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கி செவ்வாய்க்கிழமை டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இக்காலாண்டு முடிவில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளது.
வீட்டுக் கடன் சேவை அளிக்கும் ஹெச்டிஎஃப்சி, ரீடைல் வங்கி சேவை பிரிவான ஹெச்டிஎஃப்சி வங்கி உடன் இணைக்கப்பட்ட பின்பு, ஹெச்டிஎஃப்சி வங்கி ஒரே காலாண்டு முடிவுகளாக வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் கடந்த வருடத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட 34% உயர்ந்து ரூ.16,372.54 கோடியாக உள்ளது. ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைப்பின் மூலம் லாபத்தில் அதிகப்படியான வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஜூலை 1, 2023ல் இந்த இணைப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII), அதாவது டிசம்பர் காலாண்டில் சம்பாதித்த வட்டி வருமானத்திற்கும், செலவழிக்கப்பட்ட வட்டி வருமானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம். டிசம்பர் காலாண்டில் நிகர வட்டி வருமானம் வருடாந்திர அடிப்படையில் 24% அதிகரித்து ரூ.28,471.34 கோடியாக உள்ளது.
இதுவே செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் 2.5% உயர்ந்தது, நிகர வட்டி வருமானம் கிட்டத்தட்ட 4% வளர்ந்ததுள்ளது. டிசம்பர் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஒதுக்கீடுகள் அதாவது Provisions ரூ.4,217 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுக்கு ரூ.2,806 கோடியாகவும், ஒரு காலாண்டிற்கு முன்பு ரூ.2,904 கோடியாகவும் இருந்தது.
ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர வாராக் கடன் சொத்துக்கள் மதிப்பு 1.26 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் 1.23 சதவீதமாகவும், செப்டம்பர் காலாண்டில் 1.34 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 காலாண்டுகளுக்காக வாராக் கடன் குறைந்து வருவது மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த வர்த்தகம் 34.93 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாகவும், இது கடந்த ஆண்டில் 22.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்த வைப்பு நிதி வருடாந்திர அடிப்படையில் 28 சதவீதம் அதிகரித்து 22.14 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 0.4 சதவீதம் உயர்ந்து 1,679.15 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications