நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை சார்ந்த வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, அதன் இரண்டாவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 22.30% அதிகரித்து, 11,125.21 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் நிகர வட்டி வருவாய் விகிதம் 19% அதிகரித்து, கடந்த ஆண்டினை காட்டிலும் 21,021 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கியின் நிகர வருவாய் (டிரேடிங், சந்தை இழப்பு தவிர) 18.3% அதிகரித்து, 28,869.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 24,409.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நிகர வட்டி வருவாய்
இதே மொத்த நிகர வருவாய் ( நிகர வட்டி வருவாய் மற்றும் மற்ற வருமானம் உள்பட) 28,616.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகர வட்டி வருவாய் விகிதம் 18.9% அதிகரித்து, 21,021.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 17,864.4 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்த வருவாய்
மொத்த வருவாய் விகிதம் 46,182 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 38,754 கோடி ரூபாயாக இருந்தது. இதே செலவினங்கள் மற்றும் ஒதுக்கீடு தவிர்த்து 28,790 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 22,947 கோடி ரூபாயாக இருந்தது.
மோசமான கடன்
முக்கிய நிகர வட்டி மார்ஜின் விகிதம் 4.1% ஆகவும், மொத்த சொத்தின் மூலம் கிடைத்த வட்டி வருவாய் விகிதம் 4.3% ஆகவும் உள்ளது. சொத்தின் மதிப்பானது கடந்த ஆண்டினை காட்டிலும் ஏற்றம் கண்டுள்ளது. இதே செயல்படாத சொத்துக்களின் மதிப்பும் 1.23% ஆக குறைந்துள்ளது. இது கடந்த காலாண்டில் 1.28% ஆக இருந்தது.
வாரக்கடன் மதிப்பு
மொத்த வாரக்கடன் மதிப்பானது 1.23% ஆக செப்டம்பர் காலாண்டில் உள்ளது.இதில் நிகர வாரக்கடன் மதிப்பு 0.33% ஆகும்.
இதற்கிடையில் செயல்பாட்டு செலவினங்கள் 21% அதிகரித்து, 11,224.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருவாய் விகிதத்தில் செலவினம் 39.2% என்ற விகிதத்தில் உள்ளது.
டெபாசிட் விகிதம்
மொத்த டெபாசிட் செப்டம்பர் காலாண்டில் 22.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 21% அதிகரித்துள்ளது. இதே மொத்த அட்வான்சன்ஸ் செப்டம்பர் 30 நிலவரப்படி, 14.8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 23% அதிகரித்துள்ளது.
போதுமான மூலதனம்
இதே மொத்த முன் பணங்கள் 14.8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 23% அதிகரித்துள்ளது. கடன் வழங்குபவரின் மூலதனம் போதுமான அளவு 18% ஆக உள்ளது. இது ஒழுங்குமுறை தேவையான 11.7%-வினை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை நிலவரம்
இதற்கிடையில் கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது 3.26% அதிகரித்து, 1439 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இந்த காலாண்டு முடிவுகள் விடுமுறை நாளில் வெளியானதை அடுத்து, இதன் தாக்கம் நாளை சந்தையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ நிலவரம்
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யின் நிகரலாபம் கடந்த ஜூன் காலாண்டில் 6068.08 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டிலும் இதே நிலை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை விட தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications