HDFC வங்கி-யின் இன்ப அதிர்ச்சி.. லாபம், வருவாய் உடன் டிவிடெண்ட் அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி, 2024ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் (மார்ச் 2024) ரூ.16,512 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் (YoY) 37.1% அதிகமாகும்.

மார்ச் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் Net interest income (NII) எனப்படும் மொத்த வட்டி வருமானம் வருடாந்திர அடிப்படையில் 24.5% வளர்ச்சி அடைந்து ரூ.29,077 கோடியாக அதிகரித்துள்ளது.

HDFC வங்கி-யின் இன்ப அதிர்ச்சி.. லாபம், வருவாய் உடன் டிவிடெண்ட் அறிவிப்பு.. முதலீட்டாளர்கள் ஹேப்பி!

ஹெச்டிஎப்சி வங்கி அதன் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் வகையில் ​2024 ஆம் நிதியாண்டுக்கு ஒரு பங்கிற்கு ரூ.19.5 ஈவுத்தொகையை அறிவித்தது.

மேலும் ஹெச்டிஎப்சி வங்கியின் முக்கிய நிகர வட்டி வரம்பு அதாவது net interest margin மொத்த சொத்துக்களில் 3.44% ஆகவும், வட்டி ஈட்டும் சொத்துக்களின் அடிப்படையில் 3.63% ஆகவும் மார்ச் காலாண்டில் உள்ளது.

லாபம் அதிகரித்தது மட்டுமல்லாமல், வங்கியின் டெபாசிட் மற்றும் கடன் வழங்கிய அளவிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது ஹெச்டிஎப்சி வங்கி. மொத்த டெபாசிட் கடந்த ஆண்டை ஒப்பிட்டு இந்த மார்ச் காலாண்டில் 26.4% அதிகரித்து ரூ.23,798 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, "CASA டெபாசிட்" எனப்படும் நடப்பு கணக்கு (current account) மற்றும் சேமிப்பு கணக்கு (savings account) களின் டெபாசிட் வளர்ச்சி 8.7% ஆக இருந்தது.

கடன்கள் வழங்குவதிலும் ஹெச்டிஎப்சி வங்கி இக்காலாண்டில் சாதனை படைத்துள்ளது. மொத்த கடன் வழங்கல் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 55.4% அதிகரித்து மார்ச் காலாண்டில் ரூ.25,078 கோடியாக இருந்தது.

வங்கி வழங்கும் கடனங்களில் பல்வேறு பிரிவுகள் அடிப்படையில் மார்ச் 2024 உடன் முடிந்த காலாண்டில் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற உள்நாட்டு சில்லறை கடனங்கள் (domestic retail loans) 109% வளர்ச்சியடைந்துள்ளன. தொழில் மற்றும் கிராமப்புற வங்கி கடனங்கள் 24.6% வளர்ச்சியும், நிறுவனங்களுக்கான கார்ப்ரேட் கடனங்கள் 4.2% வளர்ச்சி கண்டுள்ளன.

வங்கித் துறையில் Non-performing assets (NPA) எனப்படும் வாராக் கடன் அளவுகளை முதலீட்டாளர்கள் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாகும். அதாவது, கடன் வாங்கியவர்களால் திருப்பி செலுத்தப்படாத கடனங்களே NPA என அழைக்கப்படுகிறது, இது வங்கிகளின் லாபத்தைப் பாதிக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

மார்ச் 2024 கடைசி நிலவரப்படி, ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த கடனங்களில் வாராக் கடன் அளவு 1.24% ஆக உள்ளது. இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் (sequentially) குறைந்துள்ளது, கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டை ஒப்பிடும்போதும் (1.12%) குறைவாகவே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+