இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக HDFC பேங்க் இருந்து வருகிறது. இந்த வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்துள்ளனர். சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதனால் ஹெச்டிஎஃப்சி பேங்க்.. தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக குறைத்துள்ளது.
ரூ. 50 லட்சத்திற்கும் மேல் பேலன்ஸ் இருப்பவர்களுக்கு சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டி விகிதம் தற்போது 3.25 சதவீதமாக உள்ளது. இதற்கு முன்னர் இந்த விகிதம் 3.5 சதவீதமாக இருந்தது. இந்த நடவடிக்கை குறிப்பாக செலவுகளைக் குறைக்கவும், லாப வரம்பை அதிகரிக்கவும் எடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து பிற வங்கிகளும் இதே போல சேமிப்பு கணக்கு மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு நிலவி வருகிறது.

14 ஆண்டுகளுக்கும் மேலாக HDFC பேங்க் அதன் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை உயர்த்தவே இல்லை. 2011-ஆம் ஆண்டு 4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 3.25 சதவீதமாக குறைந்துள்ளது. வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கைகள்.. வங்கி வாடிக்கையாளர்களின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் முன்பு சேமிப்பு கணக்கை சேமிப்புக்காக பலர் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது பணப்பரிவர்த்தனை செய்வதற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதிக அளவிலான பணத்தை சேமிக்க விரும்புபவர்கள் பிக்சட் டெபாசிட்களை அதிகம் நாடுகின்றனர். பிக்சட் டெபாசிட்களுக்கு சேமிப்பு கணக்குகளை விட.. அதிக வட்டி கிடைக்கிறது.
மக்களின் இந்த மன மாற்றத்தின் காரணமாக நடப்பு கணக்குகள் மற்றும் சேமிப்பு கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட்களின் அளவு குறைந்து வருகிறது. வங்கிகள் திரட்டும் மொத்த நிதியில் இது போன்ற சேமிப்பு கணக்குகளின் பங்கு இதற்கு முன்பு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அது குறைந்துவிட்டது. வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளில் அதிக பணத்தை வைக்காததால்.. வங்கிகளுக்கு அந்த நிதியை பயன்படுத்த முடிவதில்லை.
வங்கி துறைகள் கடைசியாக தொற்றுநோய் காலத்தில் அதிக அளவிலான சேமிப்பு விகித குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தது. ஏப்ரல் 2020-இல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சேமிப்பு விகிதத்தை 2.7 சதவீதத்திலிருந்து.. 2022-ஆம் ஆண்டில் 2.7 சதவீதமாகக் குறைத்தது.
தற்போது HDFC பேங்க் ரூ. 6 லட்சம் கோடிக்கும் மேல் சேமிப்பு கணக்குகளில் உள்ள பாலன்ஸ் இருக்கிறது. தற்போது 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைந்துள்ளதால், இந்த ஆண்டு HDFC வங்கிக்கு வட்டி செலுத்தும் போது 1500 கோடி மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications