இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக விளங்கும் ஹெச்டிஎப்சி வங்கியின் அன்லைன் சேவைகள் 18 மணிநேரத்திற்கு இயக்காது என இவ்வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது.
இன்று பெரும்பாலான வங்கி சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் செய்யப்படும் நிலையில் ஹெச்டிஎப்சி வங்கி போன்ற அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட தனியார் வங்கிகள் 18 மணிநேரம் சேவை முடக்கத்தை அறிவித்துள்ளது, இவ்வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக விளங்குகிறது.
ஏன் சேவைகள் முடக்கப்படுகிறது..? எந்தச் சேவைகள் முடக்கப்படுகிறது..? எந்த நேரத்தில் சேவைகள் முடக்கப்படுகிறது..? என்பதைப் பார்ப்போம்..
ஹெச்டிஎப்சி வங்கி சேவை
ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மெயின்டனன்ஸ் பணிகள் மேற்கொள்ளப்படும் காரணத்தால் ஹெச்டிஎப்சி நெட் பேங்கிங் சேவை தளத்தில் கடன் தொடர்பான சேவைகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி இரவு 9 மணி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி மதியம் 3 மணி வரையில் இப்பரிவு சேவைகள் இயங்காது" எனத் தெரிவித்துள்ளனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை
வாரத்தின் இறுதி நாட்களில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தால் ஹெச்டிஎப்சி வங்கி இந்தக் காலகட்டத்தைத் தேர்வு செய்துள்ளது. மேலும் ஹெச்டிஎப்சி நெட் பேங்கிங் சேவை தளத்தில் கடன் தொடர்பான சேவைகளைத் தவிர அனைத்து சேவைகளும் எவ்விதமான தடையுமின்றி இயங்கும்.
அடிப்படை சேவைகளில் பாதிப்பு இல்லை
குறிப்பாக டிஜிட்டல் பேமெண்ட், கார்டு பேமெண்ட், ஏடிஎம் பணப் பரிமாற்றம் போன்ற அடிப்படையான சேவைகள் அனைத்துமே எவ்விதமான தடையும் கட்டுப்பாடுகள் இல்லாமல் இயக்கும். எனவே ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. அதேபோல் முன்கூட்டியே பணிகளை முடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இல்லை.
தனியார் வங்கி பிரிவு
இந்தியாவில் தனியார் வங்கி பிரிவில் நாடு முழுவதும் 5500 வங்கி கிளைகள், 1.16 லட்சம் ஊழியர்களைக் கொண்டு மிகப்பெரிய தனியார் வங்கியாக உள்ளது. பங்குச்சந்தையிலும் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்றால் மிகையில்லை.
ரிசர்வ் வங்கி அனுமதி
இந்நிலையில் ஹெச்டிஎப்சி வங்கியின் கிரெடிட் கார்டு சேவை பிரிவில் சில நிர்வாகப் பிரச்சனை காரணமாக ரிசர்வ் வங்கி இப்பிரிவில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதித்து இருந்தது. இந்தத் தடையை நீக்கி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க தற்போது ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி சிஇஓ சஷிதர் ஜெகதீசன்
இதுகுறித்து ஹெச்டிஎப்சி வங்கியின் சிஇஓ-வான சஷிதர் ஜெகதீசன் வங்கி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், கிரெடிட் கார்டு பிரிவில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க அனுமதி அளித்துள்ளது. மீண்டும் ஹெச்டிஎப்சி தனது ஆதிக்கத்தைச் செலுத்த வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது மட்டும் அல்லாமல் சிட்டி வங்கியின் ரீடைல் வர்த்தகத்தைக் கைப்பற்றவும் திட்டமிட்டு வருகிறது ஹெச்டிஎப்சி.
சிட்டி வங்கி வர்த்தகம்
சிட்டி வங்கி இந்தியாவில் தனது ரீடைல் வங்கி சேவையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு, அடமான கடன், வெல்த் மேனேஜ்மென்ட், டெப்பாசிட் எனப் பல விதமான வர்த்தகங்கள் அடங்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு 2 பில்லியன் டாலர்.
ஹெச்டிஎப்சி வங்கி முன்னிலை
இந்த வர்த்தகத்தைக் கைப்பற்ற 4 இந்திய வங்கிகளும், ஒரு வெளிநாட்டு வங்கிகளும் போட்டிப்போட்டு வருகிறது. இந்தப் போட்டியில் முன்னிலையில் இருக்கும் 3 வங்கிகளில் ஹெச்டிஎப்சி வங்கியும் உள்ளதாலும், ரிசர்வ் வங்கி கிரெட்டி கார்டு மீதான தடையை நீக்கியுள்ளதாலும் சிட்டி வங்கி ரீடைல் சேவை பிரிவைக் கைப்பற்றுவதில் ஒரு படி முன்னோடியாக உள்ளது.
சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள்
சிட்டி வங்கி இந்தியாவில் 35 வங்கி கிளைகளும், 2.8 மில்லியன் ரீடைல் வாடிக்கையாளர்கள், 1.2 வங்கி கணக்குகள், 2.6 மில்லியன் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் வைத்துள்ளது. பொதுவாகச் சிட்டி பேங்கு கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் பிற வங்கி வாடிக்கையாளர்களை விடவும் அதிகமாகச் செலவு செய்வார்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications