இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி எஜுகேஷன் அண்ட் டெவலப்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் தனது கிளை நிறுவனத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
HDFC வங்கி இந்த விற்பனை சுவிஸ் சேலேஞ்ச் முறை (Swiss challenge method) மூலம் மேற்கொள்ளப்படும் என்று ஹெச்.டி.எஃப்.சி வங்கி சனிக்கிழமை பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுவிஸ் சவால் முறை என்பது ஒரு நிறுவனம் தனது சொத்தை விற்பனை செய்யும் போது, ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி ஒரு விலையை நிர்ணயித்துக் கொள்ளும். பின்னர், இந்த ஆரம்ப விலையை விட அதிக விலை கொடுத்து வாங்க விரும்பும் வேறு யாராவது இருந்தால் அவர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
"இதன் ஒரு பகுதியாக, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, மார்ச் 30, 2024 அன்று, ஆர்வம் காட்டிய ஒரு தரப்புடன் நிபந்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை சுவிஸ் சவால் செயல்முறையில் பங்கேற்க விரும்பும் பிற தரப்புகளிடம் இருந்து எதிர் விலை அதாவது counter offer பெறுவதற்கான அடிப்படை விலையாகக் கருதப்படும்" என்று ஹெச்டிஎப்சி வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுவிஸ் சவால் செயல்முறை முடிவடைந்த பிறகு, அதிக விலை கொடுத்து வாங்க விரும்பும் தரப்பினரை இறுதி Buyer ஆக தேர்வு செய்யப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற தரப்புடன் இறுதி ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி எஜுகேஷன் மூன்று கல்வி நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கி வருவதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
சுவிஸ் சேலஞ்ச் முறை ஏன்?: பொதுவாக, ஒரு நிறுவனம் தனது சொத்தை விற்பனை செய்யும் போது அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கவே சுவிஸ் சவால் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை மூலம் ஒரு அடிப்படை விலையை நிர்ணயித்துக் கொள்வதன் மூலம், சொத்தின் மதிப்பை அறிய முடியும். அதே நேரம், இந்த ஆரம்ப விலையை விட அதிக விலை கொடுத்து வாங்க விரும்பும் வேறு யாராவது இருந்தால், அதிக லாபம் ஈட்ட முடியும்.
இந்த முறை மூலம் வெளிப்படைத்தன்மையும் (transparency) அதிகரிக்கிறது. ஏனென்றால், எந்த விலைக்குச் சொத்து விற்பனை செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. கிட்டதட்ட இதை போன்ற முறையைத் தான் திவாலான நிறுவனங்களுக்குத் தீர்வு காணும் குழு கடைப்பிடிக்கிறது, ஆனால் HDFC வங்கி தான் சுவிஸ் சேலஞ்ச் முறை பின்பற்றுவதை முன்கூட்டியே தெரிவித்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி இந்த முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும், நியாயமான விலையில் ஹெச்.டி.எஃப்.சி எஜுகேஷன் நிறுவனத்தை விற்பனை செய்யவும் முயல்கிறது என்பது தெரிவாகத் தெரிகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications