HDFC பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 13ம் தேதி வங்கியின் "Core Banking System (CBS)" புதிய தளத்திற்கு மாற்றப்படவுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் வங்கியின் டிஜிட்டல் சேவையின் வேகம் மேம்படுத்தப்படுவதோடு, அதிகரித்து வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைக் கையாளும் திறனும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜூலை 13-ஆம் தேதி அன்று சில வங்கி சேவைகள் கிடைக்காது.
இந்த புதிய தளத்திற்கு அப்கிரேட் (Upgrade) செய்வதன் மூலம், HDFC பேங்க், அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தினாலும் எந்தத் தடையும் இன்றி நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் வளர்ந்து வரும் 9.3 கோடி தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வங்கி அதன் கோர் பேங்கிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்ய உள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் ஜூலை 13ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த 13 மணி நேர இடைவெளியில், வாடிக்கையாளர்கள் சில சேவைகளைப் பெற முடியும், சில சேவைகளைப் பெற முடியாது.
ATM வழியாகப் பணம் எடுத்தல்: வாடிக்கையாளர்கள் தங்கள் HDFC பேங்க் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, எந்தவொரு ATM-இல் இருந்தும் பணத்தை தொடர்ந்து எடுக்கலாம். அனால் அதன் பின் காண்பிக்கப்படும் அக்கவுண்ட் பேலன்ஸ் ஜூலை 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7:30 மணி நிலவரப்படி இருக்கும்.
கடைகளில் பணம் செலுத்துதல்: கடைகளில், வாடிக்கையாளர்கள் தங்கள் HDFC பேங்க் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை ஸ்வைப் இயந்திரங்களில் தொடர்ந்து பயன்படுத்தலாம். அனால் பணம் செலுத்த குறிப்பிட்ட வரம்பு உள்ளது.

ஆன்லைனில், வாடிக்கையாளர்கள் தங்களுடைய HDFC பேங்க் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் தடையற்ற ஆன்லைன் பேமெண்ட் செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் UPI சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இருப்பினும், ஜூலை 13, 2024 சனிக்கிழமை அன்று அதிகாலை 3:00 மணி முதல் 3:45 மணி வரையிலும், காலை 9:30 மணி முதல் மதியம் 12:45 மணி வரையிலும் இந்த சேவை கிடைக்காது.
எனவே வாடிக்கையாளர்கள் இந்த தேதியில் தங்களுடைய பரிவர்த்தனைகளை முன்னதாகவே பிளான் செய்து பயன்படுத்துவதன் மூலம், எந்த விதத் தடையும் இன்றி வங்கி சேவைகளைப் பெற முடியும்
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications