HDFC பேங்க் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக தங்களுடைய சிஸ்டம்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருக்கிறது. இதன் காரணமாக 2025-ஆம் ஆண்டின் ஜனவரி 24 மற்றும் ஜனவரி 25 ஆகிய 2 தேதிகளில் சில சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியாது. இந்த பராமரிப்பு பணியின் போது வாட்ஸ் அப் சேட் பேங்கிங், எஸ்எம்எஸ் பேங்க்கிங், போன் பேங்கிங் போன்ற சில சேவைகள் கிடைக்காது.
இந்த பராமரிப்பு பணிகள் ஜனவரி 25 மற்றும் ஜனவரி 24 ஆகிய தேதிகளில் 16 மணி நேரம் நீடிக்கும் என்றும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி ஜனவரி 24-ஆம் தேதி அன்று இரவு 10 மணிக்கு தொடங்கி ஜனவரி 25-ஆம் தேதி அன்று பிற்பகல் 2 மணி வரையில் பராமரிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்த முழுக் காலகட்டத்திற்கும் சில வங்கி சேவைகள் கிடைக்காது. எனவே வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்றார் போல் உங்களுடைய பரிவர்த்தனையை திட்டமிட்டு கொள்ளுங்கள்.

ஆனால் வாடிக்கையாளர்கள் பின்வரும் டிஜிட்டல் தளங்களைப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்.
HDFC பேங்க் நெட்பேங்கிங்: https://netbanking.hdfcbank.com/netbanking/
HDFC பேங்க் மொபைல் பேங்கிங்:
ஆண்ட்ராய்டு - https://hdfcbk.io/HDFCBK/K/DUvfEQBup28
iOS - https://hdfcbk.io/HDFCBK/K/DUvfZUldb6r
PayZapp: https://hdfcbk.io/HDFCBK/K/DUvfEttelWw
மை கார்ட்ஸ்: https://mycards.hdfcbank.com
எனவே HDFC பேங்க் வாடிக்கையாளர்கள், வங்கி நடவடிக்கைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இதைச் செய்வதன் மூலம் பராமரிப்பு பணி நடைபெறும் போது எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் எந்த ஒரு சிரமத்தையும் தவிர்க்கலாம். ஆனால் இந்த ஒட்டுமொத்த பராமரிப்பு காலத்திலும் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் இதர மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியும்.
வெளியான அறிவிப்பில் UPI, IMPS, NEFT அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இடையூறுகள் ஏற்படுமா? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த நேரத்தில் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
அதிக அளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கிகளில் ஹெச்டிஎஃப்சி வங்கியும் ஒன்று இதற்கு முன்னரும் இதே போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்து ஹெச்டிஎஃப்சி பேங்க் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மெயில் அறிவிப்புகளை வழங்கியது. அதேபோல இந்த முறையும் தற்போது இந்த முறையும் பராமரிப்பு பணி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. தேவையற்ற சிக்கலை தவிர்க்க ஜனவரி 24 மற்றும் ஜனவரி 25 ஆகிய தேதிகளில் நீங்கள் செய்ய உள்ள பரிவர்த்தனைகளை முன்கூட்டியே செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications