52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கியின் பங்குகள் இன்று பெரும் சரிவை சந்தித்தன. இன்று ஒரு நாளில் மட்டும் 8 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து ரூ.770 என்ற 52 வாரத்தின் குறைந்தபட்ச விலையை பதிவு செய்துள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம் வங்கியின் பகுதி நேர தலைவர் மற்றும் இயக்குநரான அதானு சக்ரபர்த்தியின் எதிர்பாராத ராஜினாமா தான்.

இன்றைய சரிவின் மூலம் ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு 12.96 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 11.88 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை ஹெச்டிஎப்சி வங்கி இழந்துள்ளது.

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஹெச்டிஎப்சி வங்கி பங்குகளின் சரிவு மியூச்சுவல் பண்ட், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், எல்ஐசி, சிங்கப்பூர் அரசு, வேன்கார்டு இன்டெக்ஸ் பண்ட் ஆகிய அனைத்தும் இழப்பை சந்தித்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது FII முதலீட்டாளர்கள், இவர்கள் கையில் சுமார் 47.7 சகவீத பங்குகள் உள்ளது. இதன் மூலம் சுமார் 45,072 கோடி ரூபாய் அளவிலான இழப்பு வந்துள்ளது.

இதை தொடர்ந்தது 2.27 சதவீத பங்குகள் வைத்திருக்கும் சிங்கப்பூர் அரசு 2150 கோடி ரூபாயும், வேன்கார்டு 1176 கோடி ரூபாயும், எல்ஐசி 4,510 கோடி ரூபாயும், மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் 25,209 கோடி ரூபாயும் இழந்துள்ளனர்.

HDFC வங்கியின் பகுதி நேர தலைவராகவும் தனிப்பட்ட இயக்குநராகவும் செயல்பட்டு வந்த அதானு சக்ரபர்த்தி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். 2021 ஆம் ஆண்டு முதல் இந்தப் பொறுப்பில் இருந்த அவர், HDFC லிமிடெட் மற்றும் HDFC வங்கியின் இணைப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்.

அவரது பதவி விலகல் வங்கியின் உள்நாட்டு நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த கேள்வி தான் பங்குச்சந்தையில் பெரும் சரிவாக மாறியுள்ளது. இவருடைய ராஜினாமா திடீரென நடைபெற்றதாலும், ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் ஹெச்டிசிஎப்சி வங்கி இயக்குநர் குழுவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ராஜினாமாவுக்கான காரணம் என்ன?
அதானு சக்ரபர்த்தி தனது ராஜினாமா கடிதத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கியில் அவர் கவனித்த சில நிகழ்வுகள் தனது தனிப்பட்ட நெறிமுறைகளுடன் பொருந்தவில்லை என்று அவர் எழுதியுள்ளார். இந்தக் காரணத்தாலேயே உடனடியாக பதவியை விட்டு விலக முடிவு செய்ததாகவும், வேறு எந்த முக்கிய காரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

HDFC வங்கியின் தற்போதைய இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட கெகி மிஸ்ட்ரி, இந்த விவகாரத்தில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதானு சக்ரபர்த்தியின் பதவி விலகல் வங்கியின் செயல்பாடுகள், விதிமுறை மீறல்கள் அல்லது ரிசர்வ் வங்கி (RBI) தொடர்பான எந்த பிரச்சினையாலும் ஏற்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய தலைவரைத் தேர்வு செய்யும் அனைத்துக் கட்டங்களிலும் RBIக்கு வங்கி நிர்வாகம் முறையாகத் தகவல் அளித்துள்ளது. மேலும், நிர்வாகக் குறைபாடுகள், NPA (வாராக்கடன்) பிரச்சினைகள் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் போன்ற எந்தக் காரணமும் இந்த ராஜினாமாவுடன் தொடர்பில்லை என்று வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சிஎன்பிசி வெளியிட்டுள்ள தகவல் படி, அதானு சக்ரபர்த்தி சுயாதீன இயக்குநராக இருந்தபோதும் நிர்வாகக் குழுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன. இந்த வேறுபாடுகள் சில காலமாக இருந்தாலும், ராஜினாமா திடீரென நடந்ததால் இயக்குநர் குழுவும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராஜினாமாவுக்குப் பிறகு, வங்கி உடனடியாக நடவடிக்கை எடுத்தது. கெகி மிஸ்ட்ரியை மூன்று மாதங்களுக்கு பகுதி நேர தலைவராக நியமித்துள்ளது. இந்த நியமனத்துக்கு ரிசர்வ் வங்கியின் முழு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த இடைக்கால ஏற்பாடு வங்கியின் நிர்வாகத்தை தொடர்ச்சியாக இயங்க உதவும்.

இந்த தலைமை மாற்றத்தின் தாக்கம் உடனடியாகப் பங்குச் சந்தையில் பிரதிபலித்தது. HDFC வங்கி பங்குகள் ஒரே நாளில் 8 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்து ரூ.772 என்ற குறைந்தபட்ச விலையை எட்டின.

அமெரிக்காவில் வர்த்தகமாகும் HDFC வங்கியின் ADRs (அமெரிக்க டெபாசிடரி ரசீதுகள்) நேற்று இரவில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து 26.62 டாலர் என்ற விலையில் முடிவடைந்தன. கடந்த ஒரு மாதத்தில் 8 சதவீதமும், ஆறு மாதங்களில் 13 சதவீதமும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 15 சதவீதமும் பங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த ராஜினாமா வங்கியின் அன்றாட செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்று HDFC வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இடைக்கால தலைவரை உடனடியாக நியமித்துள்ளதால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் அல்லது சேவைகளில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. வங்கியின் நிர்வாகம் முழு செயல்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+