இந்தியாவின் முன்னணி வங்கியாக செயல்படும் HDFC பேங்க் அதன் MCLR விகிதத்தை குறைப்பதாக அறிவித்திருக்கிறது. HDFC பேங்கின் இந்த முடிவால் ஏற்கனவே கடன் பெற்று வட்டி செலுத்தி வரும் நபர்களுக்கு 0.15 சதவீதம் வரை வட்டி குறைய வாய்ப்புள்ளது. தற்போது HDFC பேங்க் 15 அடிப்படை புள்ளிகள் MCLR விகிதத்தை குறைத்திருக்கிறது. இந்த வட்டி விகிதக் குறைப்பு குறிப்பாக MCLR அடிப்படையிலான கடன் பெற்றவர்களுக்கு மாதாந்திர தவணையை குறைக்கும். அதோடு கடன் காலமும் சேர்ந்து குறைய வாய்ப்புள்ளது.

MCLR என்றால் என்ன?: MCLR என்பது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான லெண்டிங் ரேட். இது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட வட்டி விகிதமாகும். இதன் அடிப்படையில் தான் வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் வழங்கப்படும். MLCR விகிதம் அதிகரிக்கும் போது கடன் வட்டி விகிதமும் அதிகரிக்கலாம். MCLR என்பது வங்கிகள் கடன் வழங்கும்போது வழங்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். வங்கிகள் இதற்கு குறைவான வட்டிக்கு கடன் தராது.
MCLR விகிதம் தற்போது 9 சதவீதம் முதல் 9.20 சதவீதமாக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 9.10 சதவீதம் முதல் 9.35 சதவீதமாக இருந்தது. அதிலிருந்து தற்போது MCLR விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விகிதங்கள் மே 7, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. ரெப்போ விகிதம் என்பது எப்படி நமக்கு தேவைப்படும் நேரங்களில் வங்கிகளிடம் கடன் பெறுகிறோமோ? அதே போல வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும். அதற்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம் தான் ரெப்போ விகிதம்.
ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைந்ததையடுத்து தற்போது HDFC பேங்க் MCLR விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. HDFC பேங்க் உட்பட பல வங்கிகள் கடன் விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
வீட்டுக் கடன் போன்ற MCLR விகிதத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கடன்களைப் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு தற்போது வட்டி விகிதம் குறையும். இதனால் ஈஎம்ஐ-களில் குறைப்பைக் காணலாம். அதோடு கடன் காலமும் குறையும்.
MCLR என்பது வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், வாகனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்களை கொண்ட கடன்களுக்கு வட்டியை தீர்மானிக்க வங்கிகளால் பயன்படுத்தப்படும் அளவுகோலாகும். MCLR விகிதத்தில் குறைப்பு ஏற்பட்டால் ஈஎம்ஐ-களில் குறைவு ஏற்படும். இதனால் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு வட்டி சுமை குறையும்.
சமீபத்திய வட்டி விகிதங்கள்: HDFC பேங்க் ஒரே இரவு மற்றும் ஒரு மாத எம்சிஎல்ஆர் விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் இதற்கு முன்னர் 9.10 சதவீதமாக இருந்த MCLR விகிதம் 9 சதவீதமாக மாறியுள்ளது. மூன்று மாத கடன்களுக்கான MCLR விகிதம் 9.20 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 6 மாத MCLR விகிதம் 9.30 சதவீதத்திலிருந்து 9.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட கடன்களுக்கான MCLR விகிதம் 9.30 சதவீதத்திலிருந்து 9.15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 9.30 சதவீதத்திலிருந்து 9.20 சதவீதமாக உள்ளது. 3 வருட கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 9.20 சதவீதமாக உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications