சென்னை: பொதுவாக UPI பரிவர்த்தனை செய்யும்போது நாம் SMS அறிவிப்பை, அந்தந்த வங்கிகளில் இருந்து பெறுவது வழக்கம்தான். இந்நிலையில் UPI டெபிட் மற்றும் கிரெடிட் பரிவர்த்தனைகளில் SMS அறிவிப்பிற்கான வரம்பை நிர்ணயித்துள்ளதாக HDFC பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு மெயில் மற்றும் SMS மூலம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் ஜூன் 25, 2024 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SMS அறிவிப்பிற்கான வரம்பை நிர்ணயித்தாலும், அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்கள் மெயில் மூலம் அறிவிப்பை பெறுவார்கள் என்று HDFC பேங்க் தெரிவித்துள்ளது.

UPI பரிவர்த்தனைகளுக்கான SMS அறிவிப்புகளை பெறுவதற்கான வரம்புகள் என்ன?: HDFC பேங்க் வாடிக்கையாளர்கள் இப்போது ரூ. 100 மற்றும் ரூ. 500 ஆகியவற்றுக்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே SMS அறிவிப்புகளைப் பெறுவார்கள். நீங்கள் ரூ. 100 ரூபாய் பணம் அனுப்பினால் SMS அறிவிப்புகளைப் பெறுவீர்கள். அதேபோல ரூ. 500 ரூபாய்க்கு மேல் பணம் பெறப்பட்டால் உங்களுக்கு SMS அறிவிப்புகள் வரும். அனால் எல்லா UPI பரிவர்தனைகளுக்கும் உங்களுக்கு மெயில் அறிவிப்புகள் வழங்கப்படும்.
HDFC பேங்க், தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மெயில் விவரங்களின் படி, கீழ்காணும் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
"Starting from 25th June, 2024:
Email Alerts: Continue to receive email alerts for all UPI transactions.
SMS Notifications: Now only for transactions above ?100 (money sent/paid) and ?500 (money received)."
அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் மெயில் மூலம் அறிவிப்புகள் பெறுவதற்கு எவ்வாறு பதிவு செய்வது?:
ஸ்டெப் 1: https://instaservices.hdfcbank.com/?journey=107&source_type=103 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: பேங்க் அக்கவுண்டுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 3: DOB அல்லது PAN அல்லது வாடிக்கையாளர் ஐடியைப் பயன்படுத்தி "Get OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
HDFC பேங்க் கிளையில், உங்கள் தொடர்பு விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
ஸ்டெப் 1: உங்கள் HDFC பேங்க் கிளையில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, அதில் எந்த விவரங்களை மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த விவரங்களைப் பூர்த்தி செய்து கிளையில் சமர்ப்பிக்கவும். இந்தப் படிவத்தை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.
ஸ்டெப் 2: புகைப்படம், அடையாளச் சான்று ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள வங்கிக் கிளைக்கு செல்லவும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications