HDFC வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? முதல்ல இதை படிங்க.. ஆகஸ்ட் 10 முக்கிய அப்டேட்..!

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் எச்.டி.எஃப்.சி வங்கி முக்கியமான தொழில்நுட்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதால், வரும் ஆகஸ்ட் 10, 2024 அன்று மூன்று மணி நேரம் யூபிஐ சேவைகளை அதன் வாடிக்கையாளர்கள் யாரும் பயன்படுத்த முடியாது என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த திட்டமிடப்பட்ட யூபிஐ சேவை இடைநிறுத்தம் குறித்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனைவருக்கும் தெரிவித்து வருகிறது.

யூபிஐ சேவை எப்போது செயல் இழக்கும்?: எச்.டி.எஃப்.சி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள ஈமெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, ஆகஸ்ட் 10, 2024 அன்று காலை 02:30 மணி முதல் காலை 05:30 மணி வரை (3 மணி நேரம்) யூபிஐ சேவைகளைப் பயன்படுத்த முடியாது.

HDFC வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? முதல்ல இதை படிங்க.. ஆகஸ்ட் 10 முக்கிய அப்டேட்..!

இந்த காலகட்டத்தில் எச்.டி.எஃப்.சி வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு (CASA) வைத்திருப்பவர்களுக்கான நிதி மற்றும் நிதி சாராத பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.

இதோடு எச்.டி.எஃப்.சி வங்கி மொபைல் பேங்கிங் ஆப், கூகுள் பே, வாட்ஸாப் பே, பேடிஎம், ஸ்ரீராம் நிதி மற்றும் மொபிக்விக் உடன் இணைக்கப்பட்ட எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் நிதி மற்றும் நிதி சாராத பரிவர்த்தனைகள் செய்ய முடியாது.

எச்.டி.எஃப்.சி வங்கியில் யூபிஐ வரம்பு என்ன?: P2P (நபர் முதல் நபர்) வரம்பு ரூ. 1 லட்சம் அல்லது 24 மணி நேர அடிப்படையில் 20 பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும்.

இன்று ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் வரி செலுத்தும் இடத்தில் யூபிஐ பேமெண்ட் வாயிலாகச் செலுத்தப்படும் பணத்திற்கான லிமிட்-ஐ ஒரு நாளுக்கு தற்போது இருக்கும் 1 லட்சம் ரூபாயை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அந்த வகையில் வரி செலுத்தும் போது யுபிஐ வாயிலாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் இதை ஆர்பிஐ வங்கியின் இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு (எம்பிசி) கூட்டத்தில் 5 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

முன்பு வரி தொடர்பான பேமெண்ட்களுக்கு 1 லட்சம் வரையில் மட்டுமே வரி சலுகை அளிக்கப்பட்டது, இதற்கு அதிகமான தொகைக்கு வரி விதிப்பு இருந்தது. இதை தற்போது 5 லட்சமாக உயர்த்தப்பட்டது மூலம் 5 லட்சம் வரையிலான வரி பேமெண்ட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+