என்னது 2 நாள் UPI வேலை செய்யாதா..? HDFC வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..!

உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பொட்டி கடை, தள்ளு வண்டி கடையில் துவங்கி நகை கடை, 5 ஸ்டார் ஹோட்டல் வரையில் யூபிஐ பேமெண்ட் அனைத்து இடத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில் 2 நாளுக்கு யூபிஐ சேவை பயன்படுத்த முடியாது என்றால் எப்படியிருக்கும்.

HDFC வங்கி வாடிக்கையாளர்களே, உஷார்! இவ்வங்கியின் யுனைடெட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) சேவை இந்த மாதத்தில் இரண்டு நாட்களில் மிகவும் முக்கியமான சிஸ்டம் மெயின்டனென்ஸ் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் யூபிஐ சேவையைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

என்னது 2 நாள் UPI வேலை செய்யாதா..? HDFC வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..!

HDFC வங்கியின் UPI சேவைகள் எந்த நாட்களில் கிடைக்காது?

2024 நவம்பர் 5 ஆம் தேதி, இரவு 12:00 மணி IST முதல் 2:00 AM IST வரை (2 மணி நேரம்).
2024 நவம்பர் 23 ஆம் தேதி, இரவு 12:00 மணி IST முதல் 3:00 AM IST வரை (3 மணி நேரம்).

எந்த சேவைகள் பாதிக்கப்படும்?

இந்த திட்டமிடப்பட்ட சிஸ்டம் மெயின்டனென்ஸ் காலங்களில், பல முக்கிய HDFC வங்கி சேவைகள் தற்காலிகமாகப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். இரண்டு நாளும் இரவு நேரத்தில் சிஸ்டம் மெயின்டனென்ஸ் திட்டமிடப்பட்டு உள்ளதால் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படப்போவது கிடையாது.

இந்த 2 நாளும் 2 மணிநேரத்திற்கும் அதிகமாகக் காலம் பாதிக்கப்படும் சேவைகள் பட்டியல் இதுதான்.

நிதி மற்றும் நிதியல்லாத UPI பரிவர்த்தனைகள்: உங்கள் HDFC வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு அல்லது RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி UPI மூலம் பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் இக்குறிப்பிட காலத்தில் இயங்காது. அதாவது 5ஆம் தேதி இரவு 12:00 மணி முதல் 2:00 AM வரையிலான காலம். இதேபோல் நவம்பர் 23 ஆம் தேதி, இரவு 12:00 மணி முதல் 3:00 AM வரை.

தளங்கள் வாயிலான UPI பரிவர்த்தனைகள்: நீங்கள் HDFC மொபைல் பேங்கிங் பயன்பாடு, Gpay, WhatsApp Pay, Paytm அல்லது பிற மூன்றாம் தரப்பு யூபிஐ தளங்களைப் பயன்படுத்தினாலும், உங்கள் HDFC வங்கி UPI சேவை இயக்காது.

வியாபாரிகளுக்கான UPI பரிவர்த்தனைகள்: இதேபோல் HDFC வங்கியுடன் இணைந்து யூபிஐ சேவையை நிர்வாகம் செய்யும் வியாபாரிகளும் இந்த சிஸ்டம் மெயின்டனென்ஸ் காலத்தில் UPI சேவை வாயிலாக பரிவர்த்தனை பெற்ற முடியாது.

இதனால் ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம், இதன் மூலம் அவசியமற்ற சிக்கல்களை தவிர்க்கவும், HDFC வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டு அனைத்து முக்கியமான பரிவர்த்தனையைத் தீர்த்துக்கொள்வது சிறந்தது. இல்லையெனில் வங்கி ஏடிஎம் சேவையைப் பயன்படுத்தி பணம் பெற்று பேமெண்ட்-க்கு பயன்படுத்தலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+