இந்தியாவின் முன்னணி வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியுடன் நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமும், அதன் தாய் நிறுவனமுமான ஹெச்டிஎப்சி உடன் ரிவர்ஸ் மெர்ஜிங் செய்யப்பட்ட பின்பு ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் தடுமாறினாலும், அதன் காலாண்டு முடிவுகள் மூலம் தடுமாற்றத்தை சமாளித்து லாபகரமாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக ஒரு பங்கிற்கு 1,653.90 ரூபாயும், குறைந்த பட்சமாக 1,633 ரூபாயாக உள்ளது. ஜூன் காலாண்டில் ஹெச்டிஎப்சி வங்கியின் லாபம் கடந்த வருடத்தை காட்டிலும் 30 சதவீத உயர்வுடன் 11,952 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இதேபோல் மொத்த வருவாய் 39 சதவீதம் அதிகரித்து 57,817 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சந்தை மதிப்பீட்டின் படி ஹெச்டிஎப்சி வங்கி உலகின் 7வது பெரிய வங்கியாக உள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு இன்று 151 பில்லியன் டாலர் அல்லது 12.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தகமாகி வருகிறது.
சந்தை மதிப்பீட்டு அளவில் பார்க்கும் போது உலகளவில் 438 பில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் முதல் இடத்தில் உள்ளது. இதன் பின்பு 232 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் பேங்க் ஆப் அமெரிக்கா 2வது இடத்திலும், 224 பில்லியன் டாலர் உடன் சீனாவின் ICBC வங்கிகள் உலகின் அதிக மதிப்புடைய டாப் 3 வங்கிகளாக உள்ளது.

இதன் பின்பு 171 பில்லியன் டாலர் உடன் சீன விவசாய வங்கி, 163 பில்லியன் டாலர் உடன் வெல்ஸ் பார்கோ, 160 பில்லியன் டாலர் உடன் ஹெச்எஸ்பிசி ஆகியவை அடுத்த 3 இடங்களை பிடித்த நிலையில், இன்று உலகளவில் 7வது இடத்தில் ஹெச்டிஎப்சி உடனான இணைப்பிற்கு பின்பு ஹெச்டிஎப்சி வங்கி 151 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் உள்ளது.
இதை தொடர்ந்து 143 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் மோர்கன் ஸ்டான்லி, ஆகியவை டாப் 10 இடங்களை உலகளவிலான அதிக சந்தை மதிப்பீடு கொண்ட வங்கிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

141 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் சீன கட்டுமான வங்கி, 138 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் பேங்க் ஆப் சீனா, 136 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் ராயல் பேங்க் ஆப் கனடா, 118 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் Toronto Dominion Bank, 115 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் Commonwealth Bank, 112 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் CM வங்கி, 108 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் கோல்டுமேன் சாச்சஸ் ஆகியவை டாப் 15 இடங்களை பிடித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டில் ஹெச்டிஎப்சி இடத்தை JSW ஸ்டீல் நிறுவனமும், நிஃப்டி 50-யில் LTIMindtree நிறுவனங்கள் பிடித்துள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி - ஹெச்டிஎப்சி இணைப்பின் மூலம் முதலீட்டாளர்கள் 25 ஹெச்டிஎப்சி பங்குகளுக்கு 42 ஹெச்டிஎப்சி வங்கி பங்குகளைப் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications