தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்டது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய பெரிய மால்கள் வரை அனைத்திலும் மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையே செய்கின்றனர். பலவற்றுக்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது வசதியானதாக கருதப்படுகிறது. இதனால் சில்லறை பிரச்சனையும் குறைந்துள்ளது. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் UPI சேவையைப் பயன்படுத்துவதால் அவ்வப்போது அதற்கான பராமரிப்பு பணிகளையும் செய்ய வேண்டும். இல்லையெனில் சர்வர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது.
HDFC பேங்க் நவம்பர் 5 மற்றும் நவம்பர் 23 ஆகிய தேதிகளில் தனது யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் சேவையை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. HDFC பேங்கின் இணையதள தகவலின்படி நவம்பர் 5-ஆம் தேதி 2 மணி நேரமும், நவம்பர் 23-ஆம் தேதி 3 மணி நேரமும் UPI சேவை நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. சிஸ்டம் அப்டேட் பணிகளை செய்வதற்காக, இந்த இரண்டு தேதிகளில் அத்யாவசியமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பின்வரும் தேதிகளில் UPI சேவையைப் பயன்படுத்த முடியாது:
நவம்பர் 5, 2024: 12:00 AM முதல் 02:00 AM வரை (2 மணி நேரம்).
நவம்பர் 23, 2024: 12:00 AM முதல் 03:00 AM வரை (3 மணிநேரம்).
கிடைக்காத சேவைகள்: இந்த நேரத்தில் பின்வரும் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது.
HDFC பேங்கின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் மற்றும் ருபே கிரெடிட் கார்டுகளில் நிதி மற்றும் நிதி அல்லாத UPI பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது. HDFC பேங்கின் UPI சேவையைப் பயன்படுத்தும் அனைத்து வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் HDFC MobileBanking ஆப்ஸ், Gpay, WhatsApp Pay, Paytm, Shriram Finance, Mobikwik மற்றும் Kredit.Pe ஆகியவற்றில் நிதி மற்றும் நிதி அல்லாத UPI பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.
வங்கியில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கும் மக்களுக்கும் UPI சேவைகள் வசதியான ஒன்றாக மாறியுள்ளது. வார இறுதி நாட்கள், வங்கி விடுமுறை நாட்கள் என வங்கி சேவைகளை பெற இயலாத நாட்களிலும் தொடர்ந்து எந்தவித தடையும் இன்றி UPI சேவையைப் பயன்படுத்த முடிகிறது.
எனவே இவ்வளவு எளிமையாக பரிவர்த்தனை செய்ய உதவும் யுபிஐ சேவைகளுக்கும் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை செய்வது அவசியம் அப்பொழுதுதான் தடையின்றி அனைத்து சேவையையும் பெற முடியும். இன்றெல்லாம் பணம் செலுத்துவது முதல் பணம் எடுப்பது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டிய அவசியம் குறைந்துள்ளது.
HDFC பேங்கின் இந்த பராமரிப்பு பணியின் போது ஒரு சில மணி நேரம் மட்டுமே சேவைகள் கிடைக்காது, அதன் பிறகு உங்களால் தொடர்ந்து சேவையைப் பெற முடியும்.


Click it and Unblock the Notifications