மருத்துவக் காப்பீட்டுப் பாலிசி வைத்திருப்பவர்கள் பலரும் அதிர்ச்சி அடையும் வகையில் பாலிசியின் பிரீமியம் தொகை அதிகரிக்க உள்ளது. இதுக்குறித்து பலருக்கும் அவரவர் காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு ஈமெயில் மூலம் கடந்த சில மாதங்களாக அறிவித்து வருகிறது.
அப்படி ஹெச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனத்தில் மருத்து காப்பீடு பெற்ற ஒருவருக்கு இந்நிறுவனம் அனுப்பிய ஈமெயிலில், எச்டிஎஃப்சி எர்கோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் 'ஆப்டிமா ரெஸ்டோர்' மருத்துவக் காப்பீட்டு பாலிசியின் பிரீமியம் தொகை உயர்த்தப்பட உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவச் செலவுகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றிற்குப் பிறகு மருத்துவச் செலவு 14% வரை உயர்ந்துள்ளது. இதனால், காப்பீட்டு நிறுவனங்களின் இழப்பீட்டுத் தொகையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தனது தயாரிப்புகளின் நீண்ட கால நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய, எச்டிஎஃப்சி எர்கோ நிறுவனம் பிரீமியம் தொகையை சராசரியாக 7.5% முதல் 12.5% வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதில், காப்பீட்டாளரின் வயது மற்றும் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரீமியம் உயர்வு மாறுபடலாம்.
இந்த முடிவு அவசியமானது என்றும், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரீமியம் உயர்வு, வாடிக்கையாளர்களின் புதுப்பிப்பு பிரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களுக்கு புதுப்பிப்பு தேதிக்கு முன் தகவல் தெரிவிக்கப்படும்.
ப்ரீமியம் தொகை உயர என்ன காரணம்..?
இதற்கு ஆரம்பமாக இருந்தது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஏப்ரல் மாதத்தில் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளின் விதிமுறைகளை திருத்தியது. இதன் காரணமாக பாலிசி விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டதால் மருத்துவ செலவுகள் அதிகரித்ததும், காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிகளவில் இழப்பீடு கோரிக்கைகள் வந்ததும் பிரீமியம் உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருக்கிறது.
இந்த விதிமுறை மாற்றத்தில் முக்கியமான ஒன்று ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கியவர் தான் ஏற்கனவே அறிவித்த ப்ரீ எக்சிஸ்டிங் டிசீஸ் அதாவது முன்பே அறிவிக்கப்பட்ட நோய் தொற்றுக்கள் மீது பெறப்படும் மருத்துவ காப்பீடு கிளைம்-க்கான காத்திருப்பு காலம் 4 வருடத்தில் இருந்து 3 வருடமாக குறைக்கப்பட்டது. இதன் வாயிலாக அதிக எண்ணிக்கையிலான மெடிக்கல் கிளைம் வந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹெச்.டி.எஃப்.சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது பிரதான திட்டமான 'ஆப்டிமா சிக்யூர்' பாலிசியின் பிரீமியம் தொகையை உயர்த்தியது. அதேபோல், நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனமும் தனது அனைத்து பாலிசிகளின் பிரீமியம் தொகையை 4 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பிரீமியம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனம் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் உயர்வு குறித்து தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் சராசரியாக 7.5% முதல் 12.5% வரை பிரீமியம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மருத்துவ செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிரீமியம் தொகையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications