கொரோனா பீதியில் வங்கி வேலை நேரத்தை குறைத்த தனியார் வங்கிகள்.. டிஜிட்டல் பக்கம் போங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

 

எனினும் அத்தியாவசிய தேவை தவிர நாடு முழுவதிலும் உள்ள பல அத்தியாவசியமற்ற கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. அதிலும் முதல்கட்டமாக 75 நகரங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நகரங்களில் அத்தியாவசியமான காய்கறிகள், மெடிக்கல், மருத்துவமனைகள், சிறு மளிகை கடைகள் தவிர இன்னும் சிலவற்றுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.

வேலை நேரம் குறைப்பு

வேலை நேரம் குறைப்பு

இந்த நிலையில் சில வங்கிகள் சங்கம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 வரை மட்டும் செயல்படும். இது மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளது. இது சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த முறை தான் அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

கொரோனா பரவாமல் இருக்க நடவடிக்கை

கொரோனா பரவாமல் இருக்க நடவடிக்கை

தனியார் துறை வங்கிகளான ஹெஸ்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் ஆகிய வங்கி வாடிக்கையாளர்களை அவ்வங்கி டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளன. மேலும் இது கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க வாடிக்கையாளர்களுக்கும், வங்கி ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் சில மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சேவையெல்லாம் இல்லை
 

இந்த சேவையெல்லாம் இல்லை

இது தவிர மேற்கூறிய இவ்விரு வங்கிகளும் பாஸ் புக் புதுப்பிப்பு மற்றும் வெளி நாட்டு நாணய கொள்முதல் சேவைகளையும் தனியார் துறை கடன் வழங்குபவர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்காக மொபைல் வங்கி மற்றும் இண்டர்நெட் வங்கியை பயன்படுத்தி வீட்டிலிருந்து பாதுக்காப்பாகவும் வங்கியாகவும் இருக்குமாறும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்றும் இவ்வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

வங்கிகளில் கூட்டத்தினை குறைக்க நடவடிக்கை

வங்கிகளில் கூட்டத்தினை குறைக்க நடவடிக்கை

மேலும் கிளைகளில் கூட்டத்தை குறைக்க உதவும் வகையில் செக் டிராப் பெட்களைப் பயன்படுத்துமாறு ஹெச் டிஎஃப்சி வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது தவிர நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்,யுபிஐ சேவைகளை பயன்படுத்தி பயன் பெறலாம் என்றும் இவ்வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC, ICICI private banks reduce banking hours, also ask customers to go digital amid coronavirus scare

Due to coronavirus spread, Private sector banks HDFC and ICICI have asked customers to use digital services, also they reduced working hours.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X