TCS வேலையை உதறி தள்ளிவிட்டு.. அரிசி வியாபாரத்தில் ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் இளைஞர்!

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரியாக இருந்தால் உடனே ஒரு பெரு நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அதுவும் டிசிஎஸ் போன்ற முன்னணி நிறுவனம் என்றால் கேட்கவா வேண்டும்.. உடனடியாக பணியில் சேர்ந்து விடுவார்கள். ஏசியில் வேலை, நல்ல சம்பளம் இதுவே போதும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் முன்னணி நிறுவனத்தின் IT வேலையை விட்டுவிட்டு அரிசி வியாபாரத்தில் குதித்துள்ளார் ஒரு இளைஞர்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் அரிசி வியாபாரத்திலும் லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று படித்து முடித்த இளைஞர்கள் சொல்லும்போது எல்லாக் குடும்பங்களும் அதற்கு இணங்குவதில்லை. அதுவும் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் இளைஞர்கள் இதைச் சொன்னால் அவர்களுடைய குடும்பத்தினரே திட்டி தீர்த்து விடுவார்கள்.

TCS வேலையை உதறி தள்ளிவிட்டு.. அரிசி வியாபாரத்தில் ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் இளைஞர்!

ஆரம்பத்தில் இதே நிலைதான் அந்த இளைஞருக்கும் ஏற்பட்டது. டிசிஎஸ் போன்ற நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது.. ஆனால் அதை விட்டுவிட்டு அரிசி வியாபாரம் செய்வது சரியான முடிவு கிடையாது என்று பலரும் கூறியுள்ளனர். ஆனால் அந்த இளைஞருக்கோ தனது முடிவை மாற்றிக் கொள்ள மனமில்லை.

Also Read

யார் என்ன சொன்னால் என்ன.. பிடித்ததை செய்ய வேண்டும் என்பதற்காக நேரடியாக விவசாயிகளிடமிருந்து அரிசி வாங்கத் தொடங்கினார். அதை சுத்தம் செய்து.. தனது பிராண்டில் பேக்கிங் செய்து சந்தையில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் தானே நேரடியாகக் கடைகளுக்கு விநியோகம் செய்தார். இதுதான் அவருடைய வெற்றிக்கு ஆரம்பமாய் அமைந்தது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்குவதால் குறைந்த விலையில் அரிசி கிடைக்கிறது. அதோடு வாடிக்கையாளர்களும் தரமான அரிசி கிடைக்கிறதே என்பதற்காக அந்த இளைஞரின் பிராண்டை கேட்டு வாங்கி வருகின்றனர்.

ஆரம்பத்தில் 1 கிலோ அரிசியை விவசாயிகளிடமிருந்து 30 ரூபாய்க்கு வாங்கி.. பேக்கிங் செலவுகள், போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து 50 ரூபாய்க்கு கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார்.

கடைக்காரர்கள் அதிலிருந்து ரூ.5 முதல் 10 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். தற்போது அந்த இளைஞர் 200-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்து வருகிறார். மாதத்திற்கு 20 ஆயிரம் கிலோ அரிசி விற்பனையாகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.20 முதல் ரூ.25 லட்சம் வரை வருமானமும் ஈட்டி வருகிறார்.

இப்படி தாமாக முன்வந்து தொழில் தொடங்கி அதில் வெற்றி கண்ட இந்த இளைஞரின் கதையை சிலர் சோசியல் மீடியா தளங்களில் பகிர்ந்தனர். அதிலிருந்து அவருக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. ஒரே ஒரு வேலையில் கிணற்றுத் தவளை போல் ஓடிக்கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு மத்தியில் தொழில்முனைவோக மாற வேண்டும் என்ற அவருடைய முயற்சி பலருக்கும் உதாரணமாய் அமைகிறது. வேலையில் இருப்பது மட்டும் வெற்றி கிடையாது. சரியாக திட்டமிட்டு, சந்தையில் என்ன தேவை இருக்கிறது என்பதை எல்லாம் கவனித்து சொந்த தொழில் தொடங்கினால் இந்த இளைஞரை போலவே வெற்றியடையலாம் என்பதே நிதர்சன உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+