சென்னை: HDFC பேங்க் மீண்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பல்வேறு முக்கிய வங்கிச் சேவைகள் தற்காலிகமாக கிடைக்காது என்ற அறிவிப்பை வழங்கியுள்ளது. HDFC வங்கி இணையதளத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வங்கி ஜூன் 2024-இல் 2 தேதிகளில் தனது சேவைகளை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளது.
ஜூன் 9 மற்றும் 16ஆம் தேதிகளில் HDFC பேங்க் சேவை முடக்கம்: முதல் கட்ட பராமரிப்பு ஜூன் 9, 2024 அன்று அதிகாலை 3:30 மணி முதல் 6:30 AM IST வரை மூன்று மணிநேரம் நடைபெறும்.

இரண்டாம் கட்ட பராமரிப்பு ஜூன் 16, 2024 அன்று, அதிகாலை 3:30 மணி முதல் காலை 7:30 மணி வரை, நான்கு மணிநேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகள் கிடைக்காது.
இந்த பராமரிப்பு நேரங்களில் பாதிக்கப்படும் சேவைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்
1. அக்கவுண்ட் தொடர்பான சேவைகள்
2. டெபாசிட்கள்
3. ஃபண்ட் டிரான்ஸ்பர்கள் (IMPS, NEFT, RTGS)
4. அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் டவுன்லோட்
5. இன்ஸ்டன்ட் அக்கவுண்ட் ஓப்பனிங்
6. கட்டணச் சேவைகள்
7. UPI கட்டணங்கள்
வங்கி சேவையை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் இந்த தற்காலிக சேவை நிறுத்தங்களை HDFC வங்கி அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
UPI அறிவிப்புகளில் மாற்றங்கள்: கூடுதலாக, UPI பரிவர்த்தனைகளுக்கான SMS அறிவிப்புகளில் மாற்றத்தை செய்துள்ளதாக HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் 25, 2024 முதல், ரூ.100 க்கும் குறைவான UPI பரிவர்த்தனைகளுக்கான SMS அறிவிப்புகள் நிறுத்தப்பட உள்ளது. அனால், அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் தொடர்ந்து மெயில் அறிவிப்புகளைப் பெறுவார்கள். இருப்பினும், ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட UPI கட்டணங்களுக்கும், UPI மூலம் ரூ.500 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையைப் பெறுவதற்கும் மட்டுமே SMS அறிவிப்புகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்கள் குறித்த அறிவிப்பை வாடிக்கையாளர்களுக்கு HDFC பேங்க் SMS மற்றும் மெயில் மூலமாக அனுப்பி உள்ளது.SMS எச்சரிக்கைகளின் அதிர்வெண்ணைக் குறைப்பதையும், பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதையும் இந்த மாற்றம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications