இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு ஹெல்த் இன்சூரன்ஸ் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் பெரிய செலவாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில் தான் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கும் விஷயமாக ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளது.
பட்ஜெட் கூட்டம்
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் கூட்டத்தில் சாமானிய, நடுத்தர மக்கள் குறிப்பாக மாத சம்பளக்காரர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அறிவிப்பாக ஹெல்த் இன்சூரன்ஸ் மாறியுள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்பு ஹெல்த் இன்சூரன்ஸ் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் முக்கியமானதாக, அத்தியாவசியமாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் பெரிய செலவாகவும் உள்ளது,
மக்களின் எதிர்பார்ப்பு
இன்றைய பட்ஜெட் அறிக்கையில் நடப்பு கணக்குப் பற்றாக்குறை பாதிப்புக் காரணமாகப் பெரிய அளவிலான வருமான வரிச் சலுகை அளிக்கப்பட முடியாத நிலையில், மக்களின் எதிர்பார்ப்பு, தளர்வுகளைப் பூர்த்திச் செய்ய மத்திய அரசு ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிவை முக்கியமானதாகக் கையில் எடுக்க உள்ளது.
ஹெல்த் இன்சூரன்ஸ்
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் பிரிவுக்குத் தனி வருமான வரி பிரிவும், தளர்வு அளிக்கும் அளவீடும் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
பொதுத் தேர்தல் 2024
காரணம் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல், இதில் வெற்றிபெற்றால் பிஜேபி தலைமையிலான 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கப்படும். இதனால் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான அறிவிப்பை வெளியிட வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியிலும் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது.
பணவீக்கம்
2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் இந்திய பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு (CAD) நிதியளிக்கப் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும், ரூபாய் ஏற்ற இறக்கத்தை நிர்வகிப்பதற்கு அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட போதுமான நிதி ஆதாரம் இருப்பதாக நம்புகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications