வேலை வேலைனு இருந்தா இப்படித்தான் ஆகும்!! வைரலாகும் 25 வயது ஐடி ஊழியரின் பதிவு..!

நம்மில் பெரும்பாலானவர்கள் வேலை பின்பும் பணத்தின் பின்பும் ஓடிக்கொண்டிருக்கிறோம் இதற்கிடையில் நாம் விலைமதிக்க முடியாத சொத்தான நமது உடல் ஆரோக்கியத்தை மறந்து விடுகிறோம் . இதனை உணர்த்தும் வகையில் 25 வயதான ஐடி துறை ஊழியர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிதார்த் மிட்டல் என்ற 25 வயதான இளைஞர் Soshals என்ற தளத்தை நிறுவியுள்ளார், இவர் ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பரும் கூட. ஐடி துறையில் வெற்றிகரமாக தன்னுடைய வேலையை நிலை நிறுத்தி விட்டார். ஆனால் இதற்காக அவர் தன்னுடைய உடல் நிலையை கவனிக்காமல் விட்டுவிட்டார்.

வேலை வேலைனு இருந்தா இப்படித்தான் ஆகும்!! வைரலாகும் 25 வயது ஐடி ஊழியரின் பதிவு..!

தினமும் நீண்ட நேரம் வேலை செய்வது, தூக்கத்தை இழந்து தொழிலில் கவனம் செலுத்துவது, சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணாமல் தவிர்த்தது ஆகிய மூன்றும் இவருக்கு தொழில் ரீதியாக வெற்றியை ஏற்படுத்தி தந்து விட்டது ஆனால் உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மிட்டல் இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மருத்துவமனை படுக்கையில் இருந்து புகைப்படத்துடன் பதிவினை வெளியிட்டுள்ளார். "இது போன்ற கடினமான உழைப்பு நம்மை தொழில் ரீதியாக உயரமான இடத்திற்கு கொண்டு செல்கிறது, ஆனால் இதன் மறைக்கப்பட்ட பகுதி தான். ஒரு நாளைக்கு 5 மணி நேரங்களுக்கும் குறைவாக தூங்குவது, சரியாக உணவு உண்ணாமல் இருப்பதன் பலனை தான் நான் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்" என அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

மிட்டல் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்றவர் .பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். அவருடைய இந்த பதிவு உடல் நிலையை கவனிக்க வேண்டியதன் அவசியம் குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. பலரும் தங்களது சொந்த அனுபவங்களை இதில் பகிர்ந்து வருகின்றனர். அதாவது வேலை வேலை என வேலையை மட்டும் கவனிக்காமல் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் என பலர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக போதிய தூக்கமின்மை நமது உடலில் நீண்ட கால அடிப்படையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பலரும் பதிவிட்டுள்ளனர். எப்படி கடின உழைப்பு முக்கியமோ அதேபோல உடல் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை இவரது பதிவு விளக்குவதாக பல்வேறு பயனாளர்களும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மிட்டல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டதாகவும் தற்போது தன்னுடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்த இரண்டு நாள் மருத்துவமனை வாழ்க்கை தனக்கு உடல்நலம் மற்றும் உடல் நலத்திற்கு உகந்த வாழ்க்கை முறைகளை கொண்டு வர வேண்டியது குறித்து பெரிய பாடத்தை கற்பித்து விட்டதாக கூறியுள்ளார்.

வேலை வேலைனு இருந்தா இப்படித்தான் ஆகும்!! வைரலாகும் 25 வயது ஐடி ஊழியரின் பதிவு..!

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+