டெல்லி: அங்க சுத்தி இங்க சுத்தி தற்போது இந்தியாவில் மீண்டும் களமிறங்கியுள்ளது கொரோனா வைரஸ்.
இது சுகாதார ரீதியாக மக்களை எந்தளவுக்கு பாதிக்குமோ என்பது ஒரு புறம் பெரிய கவலையாக இருந்தாலும், மறுபுறம் ஏற்கனவே ஏழு வருடத்தில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள இந்திய பொருளாதாரம் என்ன ஆகுமோ என்ற பயத்தினையும் உருவாக்கியுள்ளது.
சரி அத விடுங்க பாஸ். சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும். மக்கள் நல்லா இருந்தால் தானே, வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க முடியும்.
தொடர்ந்து கண்கானிப்பு
இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தொடர்ந்து கண்கானித்து வருகிறது. குறிப்பாக விமான நிலையத்தில் 5,57,431 பயணிகளையும், இதே துறைமுகங்களில் 12,431 பேரையும் கண்கானித்துள்ளதாக என்று ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
5 பேருக்கு தாக்கம்
இவ்வாறு கண்காணிக்கப்பட்டவர்களின் 3,245 பேர்களின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பட்டதாகவும், அவற்றில் 5 நேர்மறையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், அதே நேரம் 23 பேர் காத்திருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து மாதிரிகளும் எந்த பிரச்சனைகளும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஐந்து வழக்குகள் ஏற்கனவே கேரளாவைச் இருவர் மருத்துவமனைகளில் இருந்து வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் தற்போது டெல்லியில் ஒருவரும், தெலுங்கானவில் ஒருவரும், பெங்களூருவில் ஒருவரும் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சோதனை ஆய்வகங்கள்
நாட்டின் தற்போது 15 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இன்னும் 19 ஆய்வகங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 25,000 மாதிரிகள் வரை சோதனைக்கு உட்படுத்த முடியும் என்றும் வர்தன் கூறியுள்ளார்.
பயணங்களை தவிருங்கள்
மேலும் சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான், ஈரான், கொரிய உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய மக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இல்லாத பயணங்களை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளார். அதே போல மேற்கூறிய நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்கானிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
கொரோனாவை எதிர்க்க தயார்
நாங்கள் சர்வதேச நிலவரங்களை கண்கானித்து வருகிறோம். நிலைமைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் மற்ற நாடுகளுக்கும் மாற்றப்படலாம் என்றும் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது போதியளவு முகமூடிகள் நம்மிடம் இருக்கின்றன. தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களும் உள்ளன. மேலும் கொரோனாவை எதிர்க்க அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications