IT துறைக்கு அடுத்து இது தான் டாப்.. ஹெல்த்கேர் துறை அதிரடி வாய்ப்புகள் காத்துக் கொண்டுள்ளது..!

நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், கொரோனாவின் தாக்கத்தினால் அனைத்து துறைகளும் நிலைகுலைந்து போயுள்ளன.

இன்று குறிப்பிட்டு சொல்லப்போனால் ஹெல்த்கேர் மற்றும் சில்லறை விற்பனை மட்டும் ஓரளவுக்கு நன்றாகவே வளர்ச்சி கண்டு கொண்டு இருக்கிறது.

இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் ஹெல்த்கேர் துறைக்கு தான் இன்று மவுசு அதிகம்.

ஹெல்த்கேர் துறை

ஹெல்த்கேர் துறை

இது குறித்து வெளியான ஒரு செய்தியில், இந்தியாவில் ஹெல்த்கேர் துறையானது இனி ஐடி துறைக்கு அடுத்தாற்போல இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்தும் இன்று நம்மை மீட்டுக் கொண்டு இருப்பவர்களும் அவர்களே. பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிரண் மஜும்தார் ஷா இடிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐந்து மடங்கு வளர்ச்சி

ஐந்து மடங்கு வளர்ச்சி

மேலும் ஹெல்த்கேர் துறையானது ஏற்கனவே 100 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட ஒரு துறையாகும். இந்த நிலையில் இன்னும் 10 வருடங்களில் 5 மடங்கு வளர்ச்சியினை காணலாம் என்றும் கிரண் தெரிவித்துள்ளார். ஆக நாம் இந்த துறையில் முதலீடுகளை செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

உலகின் மெடிக்கல் இந்தியா தான்

உலகின் மெடிக்கல் இந்தியா தான்

ஏற்கனவே இந்தியா தான் உலகின் மெடிக்கல் ஆக உள்ளது. மேலும் அரசு இந்த துறையின் மீது மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளது. நிறைய கற்பனைகளை செய்துள்ளது. உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 60 சதவீதம் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஏன் அவற்றை பற்றி சிந்திக்கவில்லை என்றும் கிரண் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹெல்த்கேர் துறைக்கு முக்கிய பங்கு

ஹெல்த்கேர் துறைக்கு முக்கிய பங்கு

ஆக இந்த நெருக்கடியான நேரத்தில் உலகில் உள்ள மக்களை பாதுகாப்பதில், இதன் மூலம் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது வரும் என்று நாங்கள் காத்துக் கொண்டுள்ளோம். ஆக கண்டிப்பாக இத்துறையில் நாம் முதலீட்டினை செய்ய வேண்டும்.

வாய்ப்புகள் வழங்கப்படவில்லை

வாய்ப்புகள் வழங்கப்படவில்லை

நமது சொந்த திறன்களில் நமக்கு நம்பிக்கை இல்லை. நாம் போதிய வாய்ப்புகளை ஹெல்த்கேர் துறைக்கு வழங்கவில்லை. ஹெல்த்கேர் நிபுணர்கள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கும் போதுமான வாய்ப்பினை வழங்கவில்லை. சொல்லப்போனால் நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. நாம் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

இந்த நெருக்கடியான நேரத்தில் ஹெல்த்கேர் துறையானது மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. இது தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதற்கான நேரம். இந்தியா குறைந்த விலையில் மருந்துகளை வழங்கி வருகிறது. அதுமட்டும் அல்ல மெடிக்கல் சாதனங்கள் மற்றும் சோதனைக் கருவிகள் உள்ளிட்ட பல சாதனங்களையும் குறைந்த விலைக்கு வழங்கி வருகிறோம்.

அரசு முதலீடு செய்ய வேண்டும்

அரசு முதலீடு செய்ய வேண்டும்

ஆக அரசு இந்த துறையில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும். தனியார் துறையால் அதனை செய்ய முடியாது என்றும் கிரண் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் தற்போதைய நெருக்கடியான காலத்திலும் கூட, உலகம் முழுக்க முழுமையாக செயல்பட்டு வரும் ஒரே துறை ஹெல்த்கேர் துறை தான். ஆக இந்த துறையில் வரும் காலத்தில் நிச்சயம் பல வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ள. கிரண் சொல்வதைபோல, ஐடி துறைக்கு அடுத்து நிச்சயம் ஹெல்த்கேர் துறைக்கு வாய்ப்புகள் அதிகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+