உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இதேநேரத்தில் பார்மா, மருத்துவமனை, ஹெல்த்கேர் நிறுவனங்கள் மீது ஈ-வைரஸ் தாக்குதல் அதாவது சைபர் அட்டாக் அதிகரித்துள்ளது.
குறிப்பாக 2020ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் காலக்கட்டத்தில் உலகளவில் இருக்கும் ஹெல்த்கேர் நிறுவனத்தில் சைபர் அட்டாக் அளவீடுகள் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் சைபர் கிரிமினல்களில் ஈடுபடுவோருக்கு பார்மா, மருத்துவமனை, ஹெல்த்கேர் நிறுவனங்கள் மிகவும் முக்கிய இலக்காக மாறியுள்ளது எனச் செக் பாயின்ட் ரிசர்ச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் டாக்டர் ரெட்டி லேப்ஸ் மற்றும் லுபின் ஆகிய பார்மா நிறுவனங்கள் மீது பல்வேறு ஐடி சிஸ்டம்ஸ்-களில் அதிகளவிலான சைபர் அட்டாக் நடந்தது. இந்தச் சைபர் தாக்குதலில் பல லட்ச நோயாளிகளின் தகவல்கள் திருடப்பட்டு உள்ளது என Hackrew என்னும் சைபர்செக்யூரிட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இதில் பெரும்பாலான சைபர்அட்டாக்குகள் Ransomeware தாக்குதலாக உள்ளது. 2020ல் பொதுவாகவே சைபர் அட்டாக் மிகவும் அதிகமாக உள்ள நிலையில் மருந்து மற்றும் மருத்துவத் துறை சார்ந்த நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் கிட்டதட்ட 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. மற்ற துறையில் இதே காலகட்டத்தில் 22 சதவீதம் மட்டுமே அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications