இன்று பிரேக்அப் என்பது சாதாரணமாக விஷயமாகிவிட்ட நிலையிலும் பிரிவு அனைவரின் மனதிலும் பெரும் காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த பிரேக்அப்-ல் இருந்து மீண்டு வருவதில் வலி, அலுகை, சோகம் என பெரிய போராட்டமே உள்ளது.
ஒருவரை நாம் காதலித்துவிட்டால் அன்பை முதலீடு செய்கிறோம், ஆனால் பிரேக்அப் ஆன பின்பு அன்பு வட்டியுடன் கிடைப்பது இல்லை. இதற்கு மாறாக சோகம் தான் வண்டி வண்டியாக கிடைக்கிறது. இந்த சோகம் மனதளவில் பாதிப்பது மட்டும் அல்லாமல் இது நம்முடைய பணி, தொழில் அனைத்தையும் பாதிக்கிறது.
இந்த நிலையில் பிரதீக் ஆரியன் என்பவர் தான் காதலில் விழுந்த போது Heartbreak Insurance Fund என்ற புதிய முறையை உருவாக்கியுள்ளார். இது தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
பிரதீக் ஆரியன்
பிரதீக் ஆரியன் என்பவர் தனது டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். இந்த பதிவில் பிரதீக் ஆரியன் தனது காதலி தன்னை ஏமாற்றிய காரணத்தால் தனக்கு 25000 ரூபாய் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார். எப்படி..?
பிரதீக் ஆரியன்
பிரதீக் ஆரியன் மற்றும் அவருடை காதலி உடன் ரிலேஷன்ஷிப்-ல் இருந்த போது இருவரும் ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் தொகையை ஜாயின்ட் அகவுன்ட் உருவாக்கி டெபாசிட் செய்து வந்துள்ளனர். இந்த தொகையை யார் ஏமாற்றப்படுகிறார்களோ அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பாலிசியை உருவாக்கினோம். இதற்கு Heartbreak Insurance Fund ( HIF ) என்ற பெயரையும் வைத்தோம் என தெரிவித்துள்ளார் பிரதீக் ஆரியன்.
இன்சூரன்ஸ்
Heartbreak Insurance Fund ( HIF ) என்பது உண்மையான காதலுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்று அடுத்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு அவருடைய காதலி என்ன கூறினார் என தெரியவில்லை, ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் இதுகுறித்து பேசியுள்ளது.
8.3 லட்சம் பார்வையாளர்கள்
பிரதீக் ஆரியன் -ன் Heartbreak Insurance Fund ( HIF ) பற்றிய டிவீட்-க்கு சுமார் 12700 லைக் வந்துள்ளது, 378 பேர் கமெண்ட் செய்துள்ளனர், 971 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். சுமார் 8.3 லட்சம் பேர் இந்த பதிவை பார்த்துள்ளனர். இதில் முக்கியமான சில கமெண்ட்கள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
கமெண்ட்
ஸ்வாதி என்பவர் இந்த பணத்தை வைத்து என்ன செய்யப்போறீங்க என கேட்டதற்கு. பிரதீக் ஆரியன் அடுத்த காதலுக்கு முதலீடாக வைக்கப்போகிறேன் என்று கூற இதற்கு ஒரு பெண் அடுத்த கேர்ள்பிரெண்ட் உடன் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்ய கண்டிஷன் போடுங்க 50000 ரூபாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதற்கு பிரதீக் ஆரியன் புதிய காதலியை தேடிக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications